தருமபுரி மாவட்டத்தில் உள்ள பாலக்கோடு, பென்னாகரம், தருமபுரி, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் உள்ளிட்ட 5 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலரும் ஆட்சியருமான மலர்விழி வெளியிட்டார். இதனை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பெற்றுக்கொண்டனர்.
தருமபுரி மாவட்டத்திலுள்ள ஐந்து சட்டப்பேரவைத் தொகுதிகளில் ஆண் வாக்காளர்கள் 6 லட்சத்து 26 ஆயிரத்து 60 பேரும், பெண் வாக்காளர்கள் 6 லட்சத்து 6 ஆயிரத்து 852 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 141 பேர் என மொத்தம் 12 லட்சத்து 33 ஆயிரத்து 53 பேர் உள்ளனர்.
பெயர் | ஆண்கள் | பெண்கள் | மற்றவர் | மொத்தம் |
தருமபுரி | 13,2562 | 12,9487 | 106 | 26,2155 |
பாலக்கோடு | 11,6620 | 11,2847 | 14 | 22,9481 |
பென்னாகரம் | 12,4516 | 11,5473 | 8 | 23,9997 |
பாப்பிரெட்டிபட்டி | 13,0495 | 12,8788 | 6 | 25,9289 |
அரூா் | 12,1867 | 12,0257 | 7 | 24,2131 |