நேற்று (ஜூன் 12) சர்வதேச குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்புத் தினம் கடைப்பிடிக்கப்பட்டது. தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் எஸ். மலர்விழி தலைமையில் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
மத்திய அரசின் தேசிய குழந்தைத் தொழிலாளர் ஒழிப்புத் திட்டம் தருமபுரி மாவட்டத்தில் 1995ஆம் ஆண்டுமுதல் செயல்படுத்தப்பட்டுவருகிறது.
குழந்தைத் தொழிலாளர் முறையை முற்றிலும் ஒழிக்கும்வகையில் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தின் வாயிலாகத் தற்போது 22 சிறப்பு பயிற்சி மையங்கள் செயல்படுத்தப்பட்டுவருகின்றன.
ஒன்பது வயது முதல் 14 வயதுக்குள்பட்ட குழந்தைத் தொழிலாளர்கள் இப்பயிற்சி மையத்தில் கல்வி பயின்றுவருகின்றனர்.
மாவட்டத்தில் இதுவரையில் மொத்தம் 12 ஆயிரத்து 222 குழந்தைத் தொழிலாளர்கள் மீட்கப்பட்டு பொதுப் பள்ளிகளில் சேர்க்கப்பட்ட பல்வேறு துறைகளில் தற்போது சிறந்து விளங்கிவருகின்றனர்.
குறிப்பாக மீட்கப்பட்ட குழந்தைத் தொழிலாளர்களில் 114 பேர் தற்போது மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்கிவருகின்றனர்.
இதையும் படிங்க: உலகத்திலேயே கேவலமாக ஊரடங்கை அமல்படுத்தியது தமிழ்நாடு அரசுதான் - ஸ்டாலின்