ETV Bharat / state

ஒகேனக்கல்லில் மகாளய அமாவாசையை முன்னிட்டு தர்ப்பணம் செய்ய குவிந்த பக்தர்கள்! - தர்மபுரி செய்திகள்

தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கல்லில் மகாளய அமாவாசையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் குவிந்து தர்ப்பணம் செய்தனர்.

ஒகேனக்கல்லில் மகாளய அமாவாசையை முன்னிட்டு தர்ப்பணம் செய்ய குவிந்த பக்தர்கள்!

author img

By

Published : Oct 6, 2021, 10:54 PM IST

தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்த ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மகாளய அமாவாசையை முன்னிட்டு ஏராளமானோர், மறைந்த முன்னோர்களுக்குத் தர்ப்பணம் தர வந்திருந்தனர்.

ஒகேனக்கல் முதலைப் பண்ணைப் பகுதியில் காவிரி ஆற்றில் புனித நீராடி, மறைந்த முன்னோர்களுக்குத் தர்ப்பணம் செய்து, காவேரி அம்மன் ஆலயத்தில் வழிபாடு செய்தனர்.

ஒன்றரை ஆண்டுகளுக்குப் பின் கிடைத்த அனுமதி

கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்குப் பின்பு, ஒகேனக்கல் பகுதிக்குச் செல்ல அனுமதி தற்போது வழங்கப்பட்டுள்ளதால், ஏராளமான மக்கள் முன்னோர்களுக்குத் தர்ப்பணம் தர ஒகேனக்கல்லில் குவிந்தனர்.

ஒகேனக்கல் மெயின் அருவியில் குளிக்க அனுமதி மறுப்பால், சுற்றுலாப் பயணிகள் பரிசலில் பயணம் செய்து, காவிரி ஆற்றின் அழகை கண்டு ரசித்தனர்.

ஒகேனக்கல்லுக்கு நீா் வரத்து 13ஆயிரம் கன அடியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:திடீரென வாக்களிக்க வந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் - இரவு 8:45 மணி வரை நடந்த வாக்குப்பதிவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.