தருமபுரி மாவட்டம் ஏரியூர் ராமகொண்டஅள்ளி ஊராட்சிக்கு உள்பட்ட சந்தனக் கொடிக்கால் பகுதியைச் சேர்ந்தவர் முருகன்(47).
அவர் தனது மனைவி, மூன்று மகன்களுடன் விவசாய நிலத்தில் குடிசையில் வசித்துவருகிறார். கடந்த சில தினங்களாக தருமபுரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வந்த நிலையில், நேற்று (ஜூலை26) அவர் குடிசையை இடி, மின்னல் தாக்கியது.
அதனால் குடிசை தீப்பற்றத் தொடங்கியது, இந்நிலையில், மழைப் பெய்த காரணத்தால் தீ அணைந்துவிட்டது. இந்த விபத்தில் வீட்டிலிருந்தவர்கள் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர். ஆனால் வீட்டினருகே கட்டப்பட்டிருந்த சினைப் பசு மின்னல் தாக்கியதில் உயிரிழந்தது.
இதையும் படிங்க: கம்பம் அருகே இடி மின்னல் தாக்கி 3 பசு மாடுகள் பலி!