தருமபுரி மாவட்டத்தில் நேற்று 114 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இன்று (செப்10) 124 நபர்களுக்கு கரோனா உறுதியாகியுள்ளது.
இந்நிலையில், தற்போது தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இதுவரை தருமபுரி மாவட்டத்தில் 1,796 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.