ETV Bharat / state

அன்புமணி ராமதாஸ் குறித்து அவதூறு பரப்புவதாக திமுக எம்.பி. மீது புகார்

தருமபுரி: பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புவதாக திமுக எம்.பி. செந்தில்குமார் மீது பாமகவினர் புகார் அளித்துள்ளனர்.

திமுக எம்பி செந்தில்குமார் மீது புகார்
திமுக எம்பி செந்தில்குமார் மீது புகார்
author img

By

Published : Jul 7, 2020, 8:24 PM IST

இதுகுறித்து தருமபுரி பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளர் வெங்கடேஸ்வரன் அளித்துள்ள புகாரில், "தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார், பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் குறித்து ஜூலை 6ஆம் தேதி தனது ட்விட்டர் மற்றும் பேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவிட்டார்.

திமுக எம்பி செந்தில்குமார் ட்விட்டர் பதிவு

அதில் அன்புமணி ராமதாஸின் புகைப்படத்துடன் உங்க பெற்றோர் சின்ன வயசுல சாதி மறுப்பு சமூகநீதி சொல்லிக் கொடுக்கவில்லை என்றால், மனதில் உள்ள அசுத்தம் இப்படித்தான் ஒருநாள் பெரிய தழும்பாக வரும். இச்சமூக நோய்க்கு மருத்துவம் அவசியம் மருத்துவரே என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனவே பாமக நிறுவனர் ராமதாஸ், அக்கட்சி இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் மீது அவதூறு பரப்பும் திமுக எம்.பி .செந்தில்குமார் மீது நடவடிக்கை வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: இறுதி பருவத் தேர்வுகளை ரத்து செய்து வேண்டும் - அன்புமணி ராமதாஸ்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.