ETV Bharat / state

தேர்தல் பயிற்சி கூட்டத்திற்கு வராதவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு! - dharmapuri local body election training meeting

தருமபுரி: உள்ளாட்சித் தேர்தலுக்கான பணிகள் குறித்த பயிற்சி கூட்டத்தில் பங்குபெறாத ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் மலர்விழி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தருமபுரி உள்ளாட்சித் தேர்தல் கூட்டம்  தேர்தல் பயிற்சி கூட்டத்திற்கு வராதவர்கள் மீது நடவடிக்கை  உள்ளாட்சித் தேர்தல் பயிற்சி கூட்டம்  தருமபுரி உள்ளாட்சித் தேர்தல் பயிற்சிக்கூட்டம்  dharmapuri local body election training meeting  ollector order to sub election officers take action absentees of election traing meeting
தருமபுரி தேர்தல் பயிற்சி கூட்டத்திற்கு வராதவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவு
author img

By

Published : Dec 18, 2019, 4:01 PM IST

தருமபுரி மாவட்டத்தில் உள்ள உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது. உள்ளாட்சித் தேர்லுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று முன்தினம் முடிவடைந்த நிலையில், தற்போது தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

அரசு தரப்பிலும் தேர்தலுக்கான நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

இந்நிலையில், தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்களுக்கு தேர்தல் பணிகள் குறித்த முதற்கட்ட பயிற்சி வகுப்பு கடந்த 15ஆம் தேதி நடைபெற்றது. 13,595 பணியாளர்களுக்கு நடைபெற்ற இந்த பயிற்சியில் 694 பேர் கலந்துகொள்ளவில்லை.

இதனையடுத்து, தேர்தல் பயிற்சி வகுப்பில் பங்குபெறாத 694 பேர் மீதும் தேர்தல் விதிகளின் கீழ் நடவடிக்கை எடுக்க மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்தது.

அதன்படி, பயிற்சியில் கலந்துகொள்ளாத ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல் நடத்தும் உதவி அலுவலர்களுக்கு மாவட்ட தேர்தல் அலுவலரும் தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவருமான மலர்விழி உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: உள்ளாட்சித் தேர்தல்: வாக்குக்காக பிரியாணி, பணம் கொடுப்பதாக எழுந்த புகார்

Intro:உள்ளாட்சித் தேர்தல் பயிற்சி கூட்டத்திற்கு வராத ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் மலர்விழி அதிரடி உத்தரவு.Body:உள்ளாட்சித் தேர்தல் பயிற்சி கூட்டத்திற்கு வராத ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் மலர்விழி அதிரடி உத்தரவு.Conclusion:உள்ளாட்சித் தேர்தல் பயிற்சி கூட்டத்திற்கு வராத ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் மலர்விழி அதிரடி உத்தரவு.

உள்ளாட்சி தேர்தல் தருமபுரி மாவட்டத்தில் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் .வட்டார ஊராட்சி உறுப்பினர். சிற்றூராட்சி வார்டு உறுப்பினர் மற்றும் ஊராட்சி தலைவர் ஆகிய பதவிகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்களுக்கு முதல்கட்ட பயிற்சி வகுப்பு கடந்த 15-ஆம் தேதி நடைபெற்றது. 13595 பணியாளர்களுக்கு நடைபெற்ற இப்பயிற்சியில் 694 பேர் பயிற்சியில் கலந்து கொள்ளவில்லை .தேர்தல் பயிற்சி வகுப்பில் வருகை தராத 694 ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் மீது தேர்தல் விதிகளின் கீழ் நடவடிக்கை எடுக்க மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது . மாநில தோ்தல் ஆணையத்தின் உத்தரவு படி பயிற்சியில் கலந்து கொள்ளாத அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க மாவட்ட தேர்தல் அலுவலரும் தருமபுரி மாவட்ட ஆட்சியருமான மலர்விழி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உத்தரவிட்டுள்ளார்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.