தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் பகுதியில், அரூர் அதிமுக சட்டப்பேரவை தொகுதி வேட்பாளர் சம்பத்குமாரை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொண்டார். அப்போது திடீரென அதிமுக தொண்டர் ஒருவர் தர்மபுரி மாவட்டம் வறட்சியாக இருக்கிறது. மற்ற மாவட்டங்கள் எல்லாம் செழிப்பாக இருக்கிறது என்று குரல் எழுப்பினார்.
இதனைக் கேட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கொஞ்சம் பொறுக்குமாறும், பேசும்போது குறுக்கிடாமல் இருக்குமாறும் கோரிக்கை விடுத்தார். ஆனால் அமைதி அடையாத தொண்டர், தொடர்ந்து குரல் எழுப்பிக் கொண்டே இருந்தார். இதனால் முதலமைச்சர் தொண்டரை, இவற்றை கடைசியாக பேசிக்கொள்ளலாம் எனக்கூறி அமைதிப்படுத்த முயன்றார்.
பின்னர், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் குரல் எழுப்பிக்கொண்டிருந்த நபரை அப்பகுதியிலிருந்து அப்புறப்படுத்தினர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வேகமாகப் பரவி வருகிறது.