ETV Bharat / state

காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்பு... 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கைவிட்ட மத்திய நீர்வள ஆணையம்

author img

By

Published : Aug 30, 2022, 10:51 PM IST

Updated : Aug 31, 2022, 3:36 PM IST

காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்பதால், தமிழ்நாட்டில் உள்ள ஒன்பது மாவட்டங்களுக்கு மத்திய நீர் வள ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

காவிரி ஆற்றில் 2 லட்சத்து 12 கன அடி தண்ணீர் உயர்வு... 9 மாவட்டங்களுக்கு மத்திய நீர் ஆணையம் எச்சரிக்கை

தர்மபுரி: கர்நாடகா மற்றும் கேரளாவின் காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாகவும் தமிழ்நாட்டில் காவிரி கரையோரப் பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாகவும் காவிரி ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து இன்று மாலை நிலவரப்படி 1 லட்சத்து 85 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. நீர்வரத்து மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது என மத்திய நீர் வள ஆணையம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.

கர்நாடக மாநிலத்தின் கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணைப்பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் கர்நாடக மற்றும் கேரளப் பகுதிகளில் இருந்து வரும் நீரின் அளவு நாளை 2 லட்சத்து 12 ஆயிரம் கன அடியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட ஒன்பது மாவட்ட ஆட்சியர்கள் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களுக்கு அறிவுறுத்தி தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய மத்திய நீர் வள ஆணையம் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

இதையும் படிங்க:தமிழ்நாட்டில் அடுத்த நான்கு நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு

Last Updated : Aug 31, 2022, 3:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.