தர்மபுரி: சென்னையில் கனிம வளத்துறையில் இணை இயக்குநராகப் பணியாற்றி வந்தவர், சுரேஷ் குமார். இவர் தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களிலும் கனிம வளத்துறையில் பணியாற்றியுள்ளார்.
சேலம் மாவட்டத்தில் இவர் மீது ஏற்கெனவே ஒப்பந்த முறைகேடு தொடர்பாக சிபிசிஐடி வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில், சேலம் சிபிசிஐடி போலீசார் இன்று(செப்.14) காலை தர்மபுரி சூடாமணி தெருவில் உள்ள சுரேஷ்குமாரின் இல்லத்தில் சோதனை நடத்தி வருகின்றனர்.
இச்சோதனையில், பத்துக்கும் மேற்பட்ட அலுவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். சிபிசிஐடி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால் அவர் தற்காலிகமாக காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: அரசு துறையினருக்கு அண்ணா பதக்கம்....தமிழ்நாடு அரசு ஆணை ...