தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியத்திற்குள்பட்ட தொப்பூா் பகுதியில் தொப்பையாறு அணையை மாவட்ட ஆட்சியர் கார்த்திகா நேரில் பார்வையிட்டார்.
பின்னர் அவர் அணையின் மொத்த கொள்ளளவு, அணைக்கு நீர்வரத்திற்கான நீர் ஆதாரம், பாசன வசதி பெறும் கிராமங்களின் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்களைப் பொதுப்பணித் துறை அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.
அதனைத் தொடர்ந்து தொப்பூர் கணவாய் பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படும் பெங்களூரு-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் மாவட்ட ஆட்சியர் கார்த்திகா ஆய்வுசெய்தார்.
அப்போது விபத்து குறித்து விரிவான அறிக்கை தயார் செய்ய அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: சாலையை வெட்டி தரத்தை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்!