தர்மபுரி: தமிழ்நாட்டில் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுவதை ஒட்டி தேர்தல் விதிமுறைகள் தமிழ்நாடு முழுவதும் அமலுக்கு வந்தன. அதன்படி, தர்மபுரி மாவட்டத்திலுள்ள அரூர் பாப்பிரெட்டிப்பட்டி பென்னாகரம் தர்மபுரி பாலக்கோடு ஆகிய ஐந்து சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் தேர்தல் விதிமுறைகளை கடுமையாக்க மாவட்ட ஆட்சித் தலைவரும், தேர்தல் நடத்தும் அலுவலர் எஸ்பி கார்த்திகா உத்தரவிட்டுள்ளனர்.
அதனடிப்படையில், அரூர் சட்டப்பேரவைத் தொகுதி தேர்தல் அலுவலர் முத்தையன் மேற்பார்வையில், அரூர் சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்திற்கு வந்த அரூர் வட்டாட்சியர் செல்வகுமார், வருவாய் துறை அலுவலர்கள் அரூர் எம்எல்ஏ அலுவலகத்துக்கு சீல் வைத்தனர்.
இதேபோன்று, மாவட்டத்திலுள்ள அனைத்து தொகுதிகளிலும் உள்ள சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகங்களுக்கு வருவாய் வட்டாட்சியர்கள் சீல் வைத்தனர்.
இதையும் படிங்க: முழுமையாக காவி சாயத்தை பூசிக்கொள்கிறதா 'அண்ணா' திமுக?...