ETV Bharat / state

புல்லட் ரயில் இருக்கட்டும் முதலில் பாதுகாப்பை கொடுங்க.. அன்புமணி ராமதாஸ் ஆதங்கம்! - summer holidays

தமிழகத்தில் 3 மருத்துவ கல்லூரிக்கு மாணவர் சேர்க்கை ரத்து செய்யப்பட்டுள்ளது தமிழக சுகாதாரதுறை அமைச்சர் டெல்லி சென்று சேர்க்கை தொடர்பாக வலியுறுத்த வேண்டும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 3 மருத்துவ கல்லூரிக்கு மாணவர் சேர்க்கை ரத்து செய்யப்பட்டுள்ளது குறித்து  எம்பி அன்புமணி ராமதாஸ் ஆதங்கம்
தமிழகத்தில் 3 மருத்துவ கல்லூரிக்கு மாணவர் சேர்க்கை ரத்து செய்யப்பட்டுள்ளது குறித்து எம்பி அன்புமணி ராமதாஸ் ஆதங்கம்
author img

By

Published : Jun 5, 2023, 11:10 AM IST

தமிழகத்தில் 3 மருத்துவ கல்லூரிக்கு மாணவர் சேர்க்கை ரத்து செய்யப்பட்டுள்ளது குறித்து எம்பி அன்புமணி ராமதாஸ் ஆதங்கம்

தருமபுரி: தருமபுரி அதியமான் கிரிக்கெட் கிளப் சார்பில் ஏ.எம்.ஆர் கிரிக்கெட் போட்டி கடந்த 15 தினங்களாகத் தருமபுரியில் நடைபெற்றது . ஆயிரத்திற்கும் மேற்பட்ட அணிகளின் சார்பில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிரிக்கெட் வீரர்கள் போட்டியில் கலந்து கொண்டு விளையாடினர். இறுதிப் போட்டியை பாமக தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “கோடை விடுமுறைக் காலத்தில் இளைஞர்கள் திசை மாறிப் போகக்கூடாது என்பதற்காக கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டு வருகிறது‌. இதேப் போல் மற்ற போட்டிகளும் நடத்தப்படவுள்ளது. தருமபுரி மாவட்டத்திற்குக் காவிரி உபரி நீர் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம். ஆனால் சட்டமன்றத்தில் அமைச்சர் ஆய்வு செய்து வருவதாகத் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு சுமார் 620 டிஎம்சி தண்ணீர் வீணாகக் கடலில் கலந்துள்ளது. இந்த திட்டம் நிறைவேற்றினால் நீராதாரம் பெருகும், வேலை வாய்ப்பு உருவாகும்.

வெளியூர் வேலைக்குச் சென்றவர்கள் திரும்பி வருவார்கள். இந்த திட்டத்தை நிறைவேற்றப் பல போராட்டம் நடத்தப்பட்டது. இதனை நிறைவேற்றப்படும் என உறுதி கூட முதலமைச்சர் சொல்லவில்லை. இதனை அரசியலாகப் பார்க்கிறாரா என தெரியவில்லை. அம்பத்தூர் பகுதியில் 77 மது குடிப்பகங்கள் செயல்பட்டு வருகிறது. இது காவல் துறையினருக்குத் தெரியாமல் நடைபெறாது. 500 டாஸ்மாக் கடைகளை மூடுவதாகச் சொன்னார்கள். இதைக் கருணாநிதியின் பிறந்த நாளில் அறிவிப்பு வரும் என எதிர்பார்த்தோம். தமிழ்நாட்டில் கடந்த 10 மாதத்திற்கு முன்பு தான் மின் கட்டணம் உயர்த்தியது.

தற்போது மீண்டும் மின் கட்டணம் உயர்வதாகத் தெரிவித்திருக்கிறார்கள். அவ்வாறு உயர்த்தினால் ஏற்றுக் கொள்ள முடியாது. இதனை பாமக எதிர்த்துப் போராடும். மேகதாது அணைக் கட்டும் முயற்சியைக் கர்நாடக மேற்கொண்டு வருகிறது. இதே நீர்வளத் துறை அமைச்சர் சிவக்குமார் தான், அணை கட்ட நிதி ஒதுக்கி, பல அரசியல் செய்தார். அவர்கள் சொல்வதை நாம் நம்பக் கூடாது. கர்நாடகாவில் 4 பெரிய அணைகள் உள்ளது. ஆனால் நமக்கு மேட்டூர் அணை ஒன்று தான் உள்ளது. இந்த அணை கட்டுவதைத் தடுத்து நிறுத்தவேண்டும். தமிழ்நாடு அதை எதிர்க்கவேண்டும்.

மத்திய அரசு இந்த அணைக்கட்ட அனுமதிக்கக் கூடாது. இந்தியா முழுவதும் 40 மருத்துவக் கல்லூரிக்கு மாணவர் சேர்க்கை ரத்து செய்யப்பட்டுள்ளது. 170 மருத்துவக் கல்லூரிக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இதனை மோடி அனுமதிக்கக் கூடாது. இந்தியாவிற்கு இன்னும் 10 இலட்சம் மருத்துவர்கள் தேவை இருந்து வருகிறது. இதற்குத் தமிழ்நாடு சுகாதாரத் துறை அமைச்சர் நேரில் சென்று உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் அதிகமாகச் சிறுதானியம் விளைவது தருமபுரி தான். ஆனால் சிறுதானியத்தை கர்நாடகாவில் வாங்குவது சரியில்லை. கடந்த காலங்களில் பட்டுப்பூச்சி கூட கர்நாடகவில் தரமாக இருப்பதாக கூறினார்கள். ஆனால் தருமபுரியில் கிடைப்பதுதான், தரமாக இருந்தது. இதெல்லாம் பணத்திற்காக, கமிஷனுக்கு வாங்குகிறார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் மதுவிலக்கு துறைக்கு சமூக அக்கறையுள்ள வரை நியமிக்க வேண்டும். செந்தில் பாலாஜி போன்றவர்களால் திமுக ஆட்சிக்கு கெட்டப்பெயர் தான். ஆட்டோமேட்டிக் மெஷினை செந்தில் பாலாஜி திறந்து வைக்கிறார்.

திமுக கட்சியின் நிறுவனரின் கொள்கைப்படி இயங்க வேண்டும். ஒடிசா ரயில் விபத்திற்குக் காரணம் என்ன என்பது தெரியவில்லை. ஆனால் ரயில்வே துறை மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். இது போன்ற விபத்தினை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். புல்லட் ரயில் கொண்டு வருவதை விட, பாதுகாப்பிற்கு நிதி ஒதுக்கீடு செய்து, தொழில்நுட்பத்தினை கொண்டு வரவேண்டும்” என பல்வேறு குறைகளை முன்னிறுத்தி நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டார்.

இதையும் படிங்க: ஒடிசா ரயில்கள் விபத்தில் சிபிஐ விசாரணை - மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பரிந்துரை!

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.