தர்மபுரி: பாலக்கோடு பேரூராட்சி பகுதிக்கு உட்பட்ட தீர்த்தகிரி நகரில் மின்சார பழுது குறித்து ஒரு பெண்மணி மற்றும் மற்றொரு நபர் அலுவலகத்தில் நேரடியாக வந்து ஊழியர்களிடம் புகார் தெரிவித்துள்ளனர்.
அப்போது பணியில் இருந்த குப்புராஜ் என்ற மின்சார வாரிய ஊழியர், புகார் தெரிவிக்க வந்தவர்களை தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது.
மேலும், ”நான் அதிகாரி” என்று கூறிவிட்டு அலுவலகத்தின் உள்ளே சென்ற அவர், அலுவலகத்தில் இருந்த மின்சார மீட்டரை ஒன்றை எடுத்து புகார் அளிக்க வந்த நபர் மீது தூக்கி வீசியுள்ளார். இதுகுறித்த வீடியோ காட்சி வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
இதையும் படிங்க: இயற்கை எரிவாயு திட்டத்திற்காக அமைக்கப்பட்ட குழாய் வெடிப்பு... தெறித்து ஓடிய மக்கள்!