ETV Bharat / state

மத்திய அமைச்சருக்கு நன்றி சொன்ன திமுக எம்.பி.! - தருமபுரி

தருமபுரி: வானொலி நிலைய ஒலிபரப்பு நேரத்தை நீட்டித்து, ஆணையை வழங்கியமைக்கு மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு  திமுக எம்.பி.,செந்தில்குமார் நன்றி தெரிவித்துள்ளார்.

all ndia radio
author img

By

Published : Nov 5, 2019, 11:42 PM IST

அகில இந்திய வானொலியின் தருமபுரி பண்பலை வானொலி நிலையம் நல்லம்பள்ளி அருகே செயல்பட்டு வருகிறது. இந்த வானொலி நிலையத்தின் நிகழ்ச்சிகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை ஒலிபரப்பப்பட்டன.

இந்நிலையில் கடந்த மாதம் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினா் செந்தில்குமார் மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சரிடம் ஒலிபரப்பு நேரத்தை நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை மனு அளித்திருந்தார். தற்போது இம்மாதம் முதல் தேதியில் இருந்து தருமபுரி அகில இந்திய வானொலி நிகழ்ச்சிகள் இரவு 11 மணி வரை நீட்டிப்பு செய்து, மத்திய அரசின் தகவல் ஒளிபரப்புத் துறை அனுமதி வழங்கியுள்ளது.

all ndia radio dmk mp visit
வானொலி நிலையத்தை நேரில் சென்று பார்வையிட்ட திமுக எம்.பி செந்தில்குமார்

இந்நிலையில் இன்று தருமபுரி பண்பலை வானொலி நிலையத்தை நேரில் சென்றுப் பார்வையிட்ட தருமபுரி மக்களவை உறுப்பினர் செந்தில் குமார் நிகழ்ச்சி ஒலிபரப்பு மற்றும் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திமுக எம்.பி.,செந்தில்குமார், " கிராமப்புறங்களில் உள்ள விவசாயிகள், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அகில இந்திய வானொலியில் நிகழ்ச்சிகள் அமைந்துள்ளன. மேலும், குறிப்பாக அகில இந்திய வானொலியின் செய்திகள் பல்வேறு தரப்பினருக்கும் பயனுள்ளதாக அமைந்து வருகிறது.

திமுக எம்.பி.,செந்தில் குமார் செய்தியாளர்கள் சந்திப்பு

இந்த பண்பலையின் ஒலிபரப்பு நேரத்தை நீட்டிப்பு செய்தமைக்கு மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், தருமபுரி மாவட்டத்தில் மலைப்பகுதிகளில் சரிவர வானொலி கேட்காதப் பகுதிகளில் வானொலி கேட்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்." என்றார்.

இதையும் படிங்க:

காவல் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இளைஞர் கைது!

Intro:tn_dpi_01_allindiaradio_dmk_mp_visit_vis_byte_7204444Body:தருமபுரி வானொலி நிலைய ஒலிபரப்பு நீட்டிப்பு மத்திய அமைச்சருக்கு தருமபுரி திமுக எம்.பி.செந்தில்குமார் நன்றி.Conclusion:அகில இந்திய வானொலியின் தருமபுரி வானொலி நிலைய ஒலிபரப்பு நேரத்தை நீட்டித்து ஆணையை வழங்கியமைக்கு மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துள்ளார் தருமபுரி திமுக மக்களவை உறுப்பினர் டாக்டர் செந்தில்குமார்.

அகில இந்திய வானொலியின் தருமபுரி பண்பலை வானொலி நிலையம் நல்லம்பள்ளி அருகே செயல்பட்டு வருகிறது. இந்த வானொலி நிலையத்தின் நிகழ்ச்சிகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை ஒலிபரப்பப்பட்டது.

இந்நிலையில்கடந்த மாதம் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினா் செந்தில்குமார் மத்திய தகவல்ஒளிபரப்புதுறை அமைச்சரிடம் ஒலிபரப்பு நேரத்தை நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை மனு அளித்திருந்தார். தற்போது இம் மாதம் முதல் தேதியில் இருந்து தருமபுரி அகில இந்திய வானொலி நிகழ்ச்சிகள் இரவு 11 மணி வரை நீட்டிப்பு செய்து மத்திய அரசின் தகவல் ஒளிபரப்புத் துறை அனுமதி வழங்கியுள்ளது.

இந்நிலையில் இன்று(05.11.19) தருமபுரி பண்பலை வானொலி நிலையத்தை நேரில் சென்று பார்வையிட்ட தருமபுரி மக்களவை உறுப்பினர் டாக்டர் செந்தில்குமார் நிகழ்ச்சி ஒளிபரப்பு மற்றும் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் செந்தில்குமார் " தருமபுரி அகில இந்திய வானொலி நிலையத்தின் மூலம் ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகள் இப்பகுதி மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது. இந்த நிகழ்ச்சிகளின் நேரத்தை நீட்டிப்பு செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில் கடந்த மாதம் மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சரை சந்தித்து கோரிக்கையை முன் வைத்தேன்.

இதையடுத்து இந்த மாதம் முதல் தேதி முதல் தர்மபுரி அகில இந்திய வானொலி பண்பலை நிகழ்ச்சிகள் இரவு 11 மணிவரை நேர நீட்டிப்பு செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

கிராமப்புறங்களில் உள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அகில இந்திய வானொலியில் நிகழ்ச்சிகள் அமைந்துள்ளது. மேலும் குறிப்பாக அகில இந்திய வானொலியின் செய்திகள் பல்வேறு தரப்பினருக்கும் பயனுள்ளதாக அமைந்து வருகிறது.

இந்த பண்பலையின் ஒலிபரப்பு நேரத்தை நீட்டிப்பு செய்தமைக்கு மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

தருமபுரி மாவட்டத்தில் மலைப்பகுதிகளில் சரிவர வானொலி கேட்காத பகுதிகளில் வானொலி கேட்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்." என்றார் தருமபுரி மக்களவை உறுப்பினர் டாக்டர் செந்தில்குமார்.

தருமபுரி அகில இந்திய வானொலி நிகழ்ச்சி பொறுப்பாளர் முரளி உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.