ETV Bharat / state

பொம்மிடி அருகே தம்பதியர் கொலை: அதிமுக நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கம் - aiadmk party leaders remove its party executive

பொம்மிடி அருகே வயதான தம்பதியர் இருவரை கொலைசெய்த சம்பவத்தில் தொடர்புடையதாகக் கூறப்பட்ட, அதிமுக பாப்பிரெட்டிபட்டி மேற்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்பப் பிரிவுச் செயலாளர் அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.

வேலவன்
வேலவன்
author img

By

Published : Jul 17, 2021, 6:08 PM IST

தர்மபுரி: பொம்மிடி அருகே பில்பருத்தி கிராமத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியை சுலோச்சனா. இவரது கணவர் கிருஷ்ணன். இந்தத் தம்பதியைப் பணத்திற்காக கொலைசெய்ததாக மூன்று பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதானவர்களிடம் நடத்திய விசாரணையில், பில்பருத்தி கிராமத்தைச் சேர்ந்த அதிமுக பாப்பிரெட்டிபட்டி மேற்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்பப் பிரிவுச் செயலாளர் வேலவன் முக்கியப்புள்ளியாகச் செயல்பட்டது தெரியவந்தது. தற்போது தலைமறைவாக உள்ள வேலவனை காவல் துறையினர் தேடிவருகின்றனர்.

சம்பவத்தன்று வேலவன் பேசிய காணொலி

இந்நிலையில், அதிமுகவிலிருந்து வேலவனை நீக்கி அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுத்துள்ளனர். இதனிடையே, கொலை நடந்த இடத்தில் தனக்குத் தொடர்பில்லாததுபோல வேலவன் ஊடகங்களுக்குப் பேட்டியளித்துள்ளார்.

இதையும் படிங்க: தொழில் போட்டியால் நேர்ந்த விபரீதம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.