தர்மபுரி: பென்னாகரம் அடுத்த ஒகேனக்கல் காவிரி ஆற்றில் ஆண்டுதோறும் ஆடி 18ஆம் நாளில் மாவட்டத்தைச் சார்ந்தவர்கள் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் புனித நீராடி காவிரி ஆற்று நீரை, தெய்வங்களின் சிலைகளுக்கு அபிஷேகம் செய்து வழிபடுவது வழக்கம்.
கரோனா நோய்த்தொற்றுப் பரவல் காரணமாக சுற்றுலாப் பயணிகள் ஒகேனக்கல் பகுதிக்குச்செல்ல தர்மபுரி மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
இதன்காரணமாக பென்னாகரம் பகுதியிலிருந்து ஐந்து இடங்களில் சோதனைச்சாவடி அமைத்து, காவலர்கள் சுற்றுலாப் பயணிகளை கண்காணித்து திரும்பி அனுப்பி வருகின்றனர்.
வழக்கமாக ஆடி 18ஆம் நாளில் தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கல்லில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஆடிப்பெருக்கு விழா உற்சாகமாக கொண்டாடப்படுவது வழக்கம். சென்ற ஆண்டு கரோனா நோய்த்தடுப்பு காரணமாக விழா நடைபெறவில்லை. இதனைத் தொடர்ந்து இந்த ஆண்டும் ஆடிப்பெருக்கு விழா, கரோனா இரண்டாவது அலையின் காரணமாக நடைபெறவில்லை.
ஆடிப்பெருக்கு நாளில் பரபரப்பாக காணப்படும் ஒகேனக்கல், தற்போது ஆள்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது. தர்மபுரி மாவட்ட மக்களின் முக்கிய திருவிழாவாக கொண்டாடப்படும் ஆடிப்பெருக்கு விழா, இந்த ஆண்டு உற்சாகம் இழந்து காணப்படுகிறது.
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து தற்போது 8 ஆயிரம் கனஅடியாக உள்ளது.
இதையும் படிங்க: 'பூம்புகார் கடற்கரையில் ஆடிப்பெருக்கை கொண்டாடிய புதுமணத் தம்பதிகள்'