ETV Bharat / state

தருமபுரி அருகே யானை தாக்கியதில் பெண் படுகாயம்.. முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் நேரில் ஆறுதல்!

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த பஞ்சப்பள்ளி அருகே காட்டு யானை தாக்கியதில் பெண் படுகாயமடைந்து அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

Woman injured in elephant attack again - what is the government's action?
மீண்டும் யானை தாக்கியதில் பெண் படுகாயம்-அரசு நடவடிக்கை தான் என்ன?
author img

By

Published : Apr 3, 2023, 1:53 PM IST

தருமபுரி: பாலக்கோடு அடுத்த பஞ்சப்பள்ளி வனப்பகுதியை ஒட்டியுள்ள புல்வெளி கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் வசந்தரா(வயது 45). இவர், தனது கணவர் ஜெயசங்கம் மற்றும் குடும்பத்தாருடன் வசித்து வருகிறார். இந்நிலையில், வசந்தரா வழக்கம் போல் அதிகாலை தங்களது வயல்வெளிக்குச் சென்றுள்ளார். அப்போது, எதிர்பாராதவிதமாக அங்கிருந்த 2 காட்டு யானைகள் வசந்தராவை தாக்கியது. அப்போது சத்தம் கேட்டு அருகிலிருந்தவர்கள் கூச்சலிட்டனர். இதனால், அங்கிருந்து காட்டு யானைகள் மேலும் வசந்தராவை தாக்காமல் சென்றது.

இதனையடுத்து, காட்டு யானைகள் தாக்கியதில் பலத்த காயமடைந்த வசந்தராவை, அருகே இருந்தவர்கள் உடனடியாக மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த, தகவலறிந்து வந்த பாலக்கோடு சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான கே.பி.அன்பழகன், காயமடைந்த வசந்தராவை மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்வையிட்டு அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதல் தெரிவித்தார்.

பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த சட்டமன்ற உறுப்பினர் கே.பி.அன்பழகன், “தமிழகத்தில் வனவிலங்குகள் வனத்தை விட்டு வெளியேறாமல் இருக்க அரசு மூலம் நிரந்த தீர்வு ஏற்படுத்த வேண்டும். அப்படி இல்லாத காரணத்தால் தான், வனவிலங்குகள் வனத்தை விட்டு மக்கள் வசிக்கும் பகுதிக்குச் சென்று விளைநிலங்களைச் சேதப்படுத்தி வருகிறது. அதே போல் தான் இன்று அதிகாலை இந்த பெண்மணியையும் தாக்கி உள்ளது. பலத்த காயம் ஏற்பட்டிருந்தாலும், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

மீண்டும் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்கத் தமிழக அரசு நிரந்த தீர்வு காணவேண்டும். இல்லையென்றால், வனத்தை ஒட்டி உள்ளே யானை தாண்டா பள்ளங்கள் தோண்ட வேண்டும். மேலும், அதனை முறையாகப் பராமரிக்க வேண்டும். அதே போல் சூரியசக்தி மின் வேலி அமைத்து யானைகள் கிராமப் பகுதிக்குள் வராமல் தடுக்க அரசு முன்வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கே.பி.அன்பழகன் தெரிவித்தார்.

இதையும் படிங்க: "திமுக வந்தாலே மின்தடை; நிர்வாகத் திறமை இல்லாத பொம்மை முதல்வர் ஸ்டாலின்" - எடப்பாடி பழனிசாமி விளாசல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.