ETV Bharat / state

தன்னை விரட்டச் சென்ற மக்களை திருப்பி துரத்திய காட்டு யானை! - Dharmapuri District important News

பென்னாகரம் வனப்பகுதியில் முகாமிட்டுள்ள மக்னா வகை யானை உள்ளிட்ட மூன்று காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்துவந்த நிலையில், யானையை விரட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தன்னை விரட்ட சென்ற மக்களை திருப்பி துரத்திய காட்டு யானை

author img

By

Published : Dec 13, 2022, 6:37 PM IST

தன்னை விரட்டச் சென்ற மக்களை திருப்பி துரத்திய காட்டு யானை!

தர்மபுரி: பென்னாகரம் வனப்பகுதியில் இருந்து இடம் பெயர்ந்து வந்த மக்னா உள்ளிட்ட மூன்று காட்டு யானைகள் மாமரத்துபள்ளம் பகுதியில் முகாமிட்டு இரவு நேரங்களில் ஊருக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்து வருகின்றன.

மூன்று நாட்களாக இப்பகுதியில் முகாமிட்டுள்ள யானைகளைத் துரத்த பொதுமக்கள் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றனர். யானைகள் 50 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட நெல், சோளம், ராகி, தக்காளி போன்ற பயிர்களை மிதித்து சேதப்படுத்தியுள்ளது. இரவு நேரத்தில் யானையின் பிளிறல் சத்தம்கேட்டு கிராம மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

மேலும் யானையை பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் இணைந்து காட்டுக்குள் அனுப்ப பட்டாசு வெடித்தும் கையில் தீப்பந்தம் வைத்துக்கொண்டும் துரத்தும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், யானையினை துரத்தும் நபர்களை மீண்டும் திரும்பி நின்று துரத்தியதால் யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டிருந்த பொதுமக்கள் அப்பகுதியில் இருந்து தலை தெறிக்க ஓடினர். யானைகளை அடர்ந்த காட்டுக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கையாக உள்ளது.

இதையும் படிங்க: அடுத்த 3 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.