ETV Bharat / state

9 மாதங்களுக்கு முன்பு காணாமல் போன பள்ளி மாணவி - எலும்புக்கூடாக கண்டெடுப்பு - காணாமல் போன பள்ளி மாணவி சடலமாக மீட்பு

அரூர் அருகே கடந்த 9 மாதங்களுக்கு முன்பு காணாமல் போன பள்ளி மாணவியின் உடல் காட்டுப்பகுதிக்குள் எலும்புக் கூடுகளாக கண்டெடுக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Etv Bharat காணாமல் போன பள்ளி மாணவி எலும்பு கூடாக மீட்பு
Etv காணாமல் போன பள்ளி மாணவி எலும்பு கூடாக மீட்பு
author img

By

Published : Feb 3, 2023, 4:04 PM IST

காணாமல் போன பள்ளி மாணவி எலும்பு கூடாக மீட்பு

தருமபுரி: அரூர் வட்டத்திற்கு உட்பட்ட எஸ். அம்மாபாளையம் அடுத்த முள்ளிகாடு பகுதியைச் சேர்ந்தவர், விவசாயி பெருமாள். இவருடைய மகள் ஞானசௌந்தர்யா, கோயம்புத்தூரில் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு 12ஆம் வகுப்பு படித்து வந்தார். அப்போது இவருடைய பொதுத்தேர்வை முடித்துவிட்டு தனது சொந்த கிராமத்தில் நடைபெற்ற கோயில் திருவிழாவிற்கு வந்து பங்கேற்றார்.

திருவிழா நடைபெறும் பொழுதே இவர் காணாமல் போனதாகவும், தனது மகளை எங்கு தேடியும் கிடைக்கவில்லை எனவும் தெரிவித்து இவருடைய பெற்றோர் கோட்டப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். பின்பு காவல் துறையினர் மற்றும் இவருடைய பெற்றோர், உறவினர்கள் என அனைவுரும் கோயம்புத்தூர், திருப்பூர், அரூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தேடி வந்தனர்.

எங்கு தேடியும் மாணவி குறித்து எந்த ஒரு தகவலும் சேகரிக்க முடியவில்லை. தன்னுடைய மகள் உயிரோடுதான் யாருடைய பாதுகாப்பிலோ உள்ளார் என எண்ணியிருந்த இவருடைய தந்தை பெருமாளுக்கு பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த ஒருவர், எஸ். அம்மாபாளையம் அருகே உள்ள மலைப்பகுதியில் ஒரு சடலம் தூக்கில் தொங்கப்பட்டு இருந்ததாகவும், ஆனால் உடல்கள் தசைப்பகுதிகள் எதுவும் இல்லாமல் ஒருசில எலும்புக்கூடுகள் மட்டுமே இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: சென்னையில் கத்தியுடன் கெத்து காட்டிய 6 பேர் கைது!

எனவே, தனது மகளாக இருக்குமோ என எண்ணி இவருடைய தந்தை மற்றும் உறவினர்கள் அங்கு சென்று பார்த்தபோது தனது மகள் தான் என்று உறுதி செய்தனர். இது குறித்து கோட்டப்பட்டி காவல் துறையினுக்குத் தகவல் அளித்ததன் பெயரில் சோதனை செய்து மருத்துவக் குழுவினரை வரவழைக்கப்பட்டு அங்கு இருந்த பெண்ணின் எலும்பு கூடுகள் மற்றும் அவர் பயன்படுத்திய வாட்ச் உள்ளிட்டவற்றைகளை சேகரித்து டிஎன்ஏ டெஸ்ட் மற்றும் உடற்கூடராய்விற்காக எடுத்துச் சென்றனர்.

மேலும் இந்தப் பெண்ணின் இறப்பில் சந்தேகம் உள்ளதாகவும்; இது தற்கொலை அல்ல என்றும்; இந்த கொலையில் யார் ஈடுபட்டுள்ளார் என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 9 மாதங்களுக்கு முன்பு காணாமல் போன பெண்ணின் உடல் அடர்ந்த காட்டுப் பகுதியில் வெறும் எலும்பு கூடுகள் மட்டுமே மிஞ்சியநிலையில் கிடைத்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து விபத்து - 7 பேர் படுகாயம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.