தர்மபுரி மாவட்டம் ஒடசல்பட்டியில் வசிப்பவர் சரவணன். இவர் தர்மபுரியில் உள்ள எல்ஐசி அலுவலகத்தில் எல்ஐசி முகவராகப் பணிபுரிந்துவருகிறார். இவர் கடந்த 14ஆம் தேதி அன்று தனது மனைவி ஆனந்தியின் தம்பி ஆனந்துடைய குழந்தையின் முதல் பிறந்தநாளைக் கொண்டாடுவதற்கு 13ஆம் தேதி இரவு கவுண்டம்பட்டிக்குச் சென்றுள்ளனர்.
காலையில் தனது வீட்டிற்கு வந்து பார்க்கும்பொழுது கதவுகள் உடைக்கப்பட்டு உள்ளே இரண்டு அறைகளிலிருந்த பீரோக்கள், கப்போடுகள் அனைத்தும் உடைக்கப்பட்டு உள்ளிருந்த துணிகள் அனைத்தும் வெளியே கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
அதைத் தொடர்ந்து, சரவணன் கடத்தூர் காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்துள்ளார். தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் ஆய்வாளர் ஜெய்சல் குமார் கைரேகை வல்லுநர்களை வைத்து ஆய்வு மேற்கொண்டுவருகின்றனர். வீட்டில் எட்டு பவுன் தங்க நகை, 92 ஆயிரம் ரூபாய் திருடுபோனதாக சரவணன் புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: வரலாற்று நினைவுச் சின்னங்கள், அருங்காட்சியகங்களை மூட உத்தரவு