கர்நாடக மாநிலத்தில் தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் கபினி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணையிலிருந்து வினாடிக்கு 80 ஆயிரம் கனஅடி தண்ணீர் இன்று திறந்துவிடப்பட்டுள்ளதாக அந்த அணையின் உதவி பொறியாளர் தெரிவித்துள்ளார்.
திறந்துவிடப்பட்ட தண்ணீர் நாளை மாலை எல்லைப்பகுதியான பிலிகுண்டுவிற்கு வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.