தர்மபுரி: தமிழ்நாடு காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக ஒகேனக்கல்லில் நீர்வரத்து விநாடிக்கு 7 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. கர்நாடக - தமிழ்நாட்டின் எல்லையில் உள்ள பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக கோடை மழை பெய்து வருகிறது. இதனால் ஒகேனக்கலுக்கு நீர்வரத்து அதிகரித்தும் குறைந்தும் காணப்படுகிறது.
இதனிடையே தமிழ்நாடு நீர்பிடிப்புப்பகுதிகளான, அஞ்செட்டி, பிலிகுண்டுலு, ராசிமணல், கேரட்டி, நாட்றாபாளையம் உள்ளிட்டப்பகுதிகளில் பெய்த தொடர் மழை காரணமாக ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரித்தது. இந்த நிலையில் நேற்று ஒகேனக்கல்லுக்கு விநாடிக்கு 4 ஆயிரம் கனஅடியாக நீர்வரத்து இருந்தது.
இன்று காலை 6 மணி நிலவரப்படி 7 ஆயிரம் கன அடியாக நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் மெயின் அருவி, சினி பால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் கொட்டியது. மேலும், காவிரி ஆற்றில் நீர் பெருக்கெடுத்து ஓடியது.
தமிழ்நாடு-கர்நாடக மாநில எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அலுவலர்கள் காவிரி ஆற்றில் வரும் நீர்வரத்தை அளந்து கண்காணித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: TN Weather News:தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழை!