தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த சவுடப்பசெட்டி தெருவைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் தனது உறவினர் திருமணத்திற்காக நேற்று (ஆகஸ்ட் 24) கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பகுதிக்குச் சென்று இருந்தார். பிறகு திருமணத்தை முடித்துவிட்டுத் திரும்பிய போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, உள்ளே இருந்த பொருள்கள் அனைத்தும் சிதறிக் கிடந்துள்ளன.
இதையடுத்து வீட்டில் உள்ள பீரோவைச் சோதனை செய்து பார்த்ததில், அதிலிருந்த 15 சவரன் தங்க நகைகள், 10 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. உடனே, இதுகுறித்து ராஜ்குமார் காரிமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அப்புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.