ETV Bharat / state

காவல் நிலையம் முன்பு தீக்குளித்த இளைஞர் உயிரிழப்பு: உறவினர்கள் மறியல்

கடலூர்: பண்ருட்டி அருகே முத்தாண்டிகுப்பம் காவல் நிலையம் முன்பு தீக்குளித்த இளைஞர் உயிரிழந்ததால் அவரது உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Youth who attempted suicide, காவல் நிலையம் முன்பு தீக்குளித்த இளைஞர்
Youth who attempted suicide, காவல் நிலையம் முன்பு தீக்குளித்த இளைஞர்
author img

By

Published : Jan 14, 2020, 9:57 AM IST

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே நடுக்குப்பம் பஞ்சாயத்துத் தலைவர் தேர்தலில் அதே ஊரைச் சேர்ந்த சக்திவேல் என்பவர் வெற்றிபெற்றார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட பெருமாள் என்பவர் தோல்வி அடைந்தார். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே கடந்த சில நாள்களுக்கு முன்பு மோதல் ஏற்பட்டது.

அப்போது பஞ்சாயத்துத் தலைவர் சக்திவேலின் ஆதரவாளர்கள் ராஜதுரை என்பவரின் ஹாலோ பிளாக் கொட்டகைக்கு தீவைத்தனர். இது தொடர்பாக முத்தாண்டிகுப்பம் காவல் துறையினர் சொரத்தங்குழியைச் சேர்ந்த ஜெயராமன் என்பவரைக் கைதுசெய்தனர்.

இந்தத் தகவலையறிந்த ஜெயராமனின் மகன் அனந்தராமன் (27) கடந்த 9ஆம் தேதி முத்தாண்டிக்குப்பம் காவல் நிலையம் முன்பாக தன் தந்தை மீது பொய் வழக்குப் போட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி தான் கொண்டுவந்த மண்ணெண்ணெயை தலையில் ஊற்றி தீக்குளித்தார். இதில் பலத்த காயமடைந்த அவர் உடல் கருகிய நிலையில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனிடையே அனந்தராமன் சிகிச்சைப் பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

அனந்தராமன் இறந்த தகவலையறிந்த சொரத்தங்குழியில் உள்ள அவரது உறவினர்கள் முத்தாண்டிக்குப்பம் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அனந்தராமன் இறப்பிற்கு காரணமான ஹாலோபிளாக் உரிமையாளர் ராஜேந்திரன், அவரது மகன் ராஜதுரை ஆகியோரை கைதுசெய்ய வேண்டும் எனக் கோஷமிட்டனர். இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதையடுத்து அங்கு சென்ற பண்ருட்டி காவல் துணை கண்காணிப்பாளர் நாகராஜன் உள்ளிட்ட காவல் துறை அலுவலர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாமல் தொடர்ந்து மறியல் நடைபெற்றது.

சாலை மறியல் செய்த இளைஞரின் உறவினர்கள்

பின்னர் அங்கு வந்த அதிமுக அமைப்புச் செயலாளர் சொரத்தூர் ராஜேந்திரன் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவரிடம் இறந்தவரின் குடும்பத்திற்கு நிவாரண நிதி, அவருடைய மகளுக்கு அரசு வேலை, பொய் வழக்குப் போட்டவர்கள் மீது நடவடிக்கை வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தனர். இது குறித்து ராஜேந்திரன் பரிசீலிப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து அவர்கள் மறியலை கைவிட்டு கலைந்துசென்றனர்.

இதையும் படிங்க: டிக் டாக் செயலிக்கு எதிர்ப்பு!

Intro:பண்ருட்டி அருகே முத்தாண்டிகுப்பம் காவல் நிலையம் முன்பு தீக்குளித்த வாலிபர் உயிரிழப்பு உறவினர்கள் சாலை மறியல்Body:கடலூர்
ஜனவரி 13,

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே முத்தாண்டிகுப்பம் காவல் நிலையம் முன்பு தீக்குளித்த வாலிபர் உயிரிழந்ததால் அவருடைய உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே நடுக்குப்பம் பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் தலைவர் பதவிக்கு நடுகுப்பத்தை சேர்ந்த சக்திவேல் என்பவர் வெற்றி பெற்றார் இவரை எதிர்த்து போட்டியிட்ட பெருமாள் என்பவர் தோல்வி அடைந்தார் இதனால் இரு தரப்பினருக்கும் இடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு மோதல் ஏற்பட்டது அப்போது பஞ்சாயத்து தலைவர் சக்திவேலின் ஆதரவாளர்கள் ராஜதுரை என்பவரின் ஹாலோ பிளாக் கொட்டகைக்கு தீ வைத்தனர் இது தொடர்பாக முத்தாண்டிகுப்பம் காவல் துறையினர் சொரத்தங்குழியை சேர்ந்த ஜெயராமன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

இந்த தகவலை அறிந்த ஜெயராமனின் மகன் அனந்தராமன் (27)(கால் டாக்சி டிரைவர்). கடந்த 9ம் தேதி முத்தாண்டிக்குப்பம் காவல் நிலையம் முன்பு தான் கொண்டுவந்த மண்ணெனையை தலையில் ஊற்றி தன் தந்தை மீது பொய் வழக்கு போட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தீயை பற்ற வைத்தார். இதில் அவரது உடலில் தீப்பிடித்து எரிந்தது உடல் கருகிய நிலையில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் இந்நிலையில் அவர் இன்று இறந்தார்.

அனந்தராமன் இறந்த தகவலை அறிந்த சொரத்தாங்குழியில் உள்ள அவரது உறவினர்கள் முத்தாண்டி குப்பம் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அனந்தராமன் இறப்பிற்கு காரணமான ஹாலோபிளாக் உரிமையாளர் ராஜேந்திரன் மற்றும் அவரது மகன் ராஜதுரை ஆகியோரை கைது செய்ய வேண்டும் என கோஷமிட்டனர் இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

தகவலறிந்து வந்த பண்ருட்டி துணை காவல் கண்காணிப்பாளர் நாகராஜன் காவல் ஆய்வாளர் மலர்விழி துணை ஆய்வாளர் விஜயபாஸ்கர் ஆகியோர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவருடன் பேச்சுவார்த்தை நடத்தினர் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாமல் தொடர்ந்து அவர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதைப் பற்றி அறிந்த அதிமுக அமைப்புச் செயலாளர் சொரத்தூர் ராஜேந்திரன் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர் மேலும் இறந்தவரின் குடும்பத்திற்கு நிவாரண நிதி மற்றும் அவருடைய மகளுக்கு அரசு வேலை வாங்க வேண்டும் பொய் வழக்குப் போட்டவர்கள் மீது போலீஸ் நடவடிக்கை வேண்டும் என வலியுறுத்தினார் இதுபற்றி பரிசீலிப்பதாக உறுதி அளித்தன் பெயரின் அவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.