ETV Bharat / state

வி.சி.க. சார்பில் உலக சாதனை நிகழ்ச்சி நடத்தப்பட்டது! - world record conducted by Viduthalai Chiruthaigal Katchi

கடலூர்: விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் 3 உலக சாதனை நிகழ்ச்சிகள் நிகழ்த்தப்பட்டு. சான்றிதழ் வழங்கப்பட்டது.

world record
author img

By

Published : Oct 14, 2019, 4:40 PM IST

கடலூர் கிழக்கு மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் உலக சாதனை நிகழ்த்தும் நிகழ்ச்சி கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்வினை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளன் பார்வையிட்டார். பின்னர், யுனிவர்சல் அச்சீவர்ஸ் புக் ஆஃப் ரெக்கார்ட், பியூச்சர்ஸ் கலாம்ஸ் புக் ஆஃப் ரெக்கார்ட் சார்பில் 3 உலக சாதனைகள் நிகழ்த்தப்பட்டதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.

அதில் 10,465 பனை விதைகளைக் கொண்டு தொல்.திருமாவளவனின் முகம் உருவாக்கப்பட்டது சாதனையாக கருதப்பட்டது. அதேபோன்று 3,046 பேர் திருமாவளவனின் முகமூடியை அணிந்துக் கொண்டு அம்பேத்கரின் உருவமாக நின்றனர் மற்றும். நெகிழிக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கையில் துணிப்பையுடன் உறுதிமொழி எடுத்துக் கொண்டதும் மற்றொரு சாதனை நிகழ்வாக கருதப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 17 முதல் பனை விதைகளை ஊன்றுவது தொடர்பான செயல் திட்டத்தினை நாங்கள் முன்னெடுத்தோம் தொடர்ச்சியாகப் பல லட்சக்கணக்கான பனை விதைகளை ஊன்றினோம் அதைத் தொடர்ந்து தீவிரப்படுத்த வேண்டும் என்கின்ற நோக்கத்தில் கடலூரில் 10 ஆயிரத்து 465 பனை விதைகளைக் கொண்டு என்னுடைய முகத்தினை வடிவமைக்கும் ஒரு செயல்திட்டம் உலக சாதனை என்ற அடிப்படையில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது, அதேபோல் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் உருவத்தை என்னுடைய முகமூடியை அணிந்து அதில் 3046 பேரும் அவருடைய உருவமாக கட்டமைத்து இருக்கிறார்கள்.

தமிழ் மண்ணில் நீண்ட நெடுங்காலமாக இயற்கை பேரழிவுகளில் இருந்து மண் வளத்தை, நீர்வளத்தைப் பாதுகாத்து வருகின்ற பனை மரத்தை பாதுகாக்க வேண்டும், அதை மென்மேலும் தீவிரப்படுத்த வேண்டும். என்கின்ற அடிப்படையில் உலக சாதனை நிகழ்வுகளை அரங்கேற்றி இருக்கிறோம் அத்துடன் மண்வளத்தை பெரிதும் பாதிக்கக் கூடிய மக்காத பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக் கூடாது குறிப்பாக பிளாஸ்டிக் பைகளை முற்றிலும் கைவிட வேண்டும் என்று மக்களுக்கு உணர்த்தக் கூடிய வகையில் அம்பேத்கர் முகத்தை வடிவமைத்து நின்ற 3046 பேரும் 'பிளாஸ்டிக்கை ஒழிப்போம், துணிப்பைகளை பயன்படுத்துவோம்' என்று முழக்கம் எழுப்பி இருக்கிறோம் ஒரே நேரத்தில் மூன்று உலக சாதனை நிகழ்ச்சியாக நடைபெற்றிருப்பது ஊக்கத்தை அளிக்கக்கூடிய ஒரு நிகழ்வாக நாங்கள் கருதுகிறோம்.

உலக சாதனை நிகழ்ச்சியில் வி.சி.க. தலைவர் தொல்.திருமாவளன் பேட்டி

பிரதமர் மோடி அவர்களும் சீன அதிபர் ஜின்பிங் அவர்களும் இரண்டு நாட்கள் மாமல்லபுரத்தில் தங்கியிருந்ததன் மூலம் தமிழர்களின் தொன்மையான நாகரீகம் குறித்த உரையாடல் வரலாற்றுப் பூர்வமான சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் இருந்த உறவுகள் ஆகியவை குறித்து ஒரு விரிவான உரையாடல் உலகம் தழுவிய அளவில் நிகழ்ந்திருக்கிறது என்கின்ற வகையில் நான் மகிழ்ச்சி அடைகிறேன் மற்றபடி இதில் அரசியல் ரீதியாக கருத்து சொல்ல விரும்பவில்லை.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே ஒரு தலித் மாணவனை சக மாணவன் முதுகில் ஆழமாக பிளேடு கொண்டு கிழித்து இருக்கிறான் இப்படிப்பட்ட இந்த கொடுரமான செயல் தொடர்நது வளர்ந்து வருவதற்கு காரணம் அரசியல் களத்தில் இருக்கக்கூடிய சாதியவாதிகள் மதவாதிகள் தான். சின்னஞ்சிறு பிஞ்சுகளின் கைகளில் சாதி அடையாளங்களைக் கொண்ட கயிறுகளை கட்டி விடுவது அவர்கள் பயன்படுத்தக் கூடிய பொருட்களில் சாதி அடையாளங்களை ஒட்டி அனுப்புவது இப்படி பிஞ்சு உள்ளத்தில் சாதிய அரசியல்வாதிகள் ஆதாயம் கருதி பரப்பி அதன் விளைவாக இன்றைக்கு பள்ளி மாணவர்களிடையே சாதிய உணர்வு மேலோங்கி இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது இதற்கு காரணமானவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேட்டியளித்தார்.

இதையும் படிக்க: பரிதி இளம்வழுதி முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி; திருமாவளவன் பேச்சு!

Intro:கடலூரில் விசிக சார்பில் 3 உலக சாதனைகள்
தொல்.திருமாவளன் பங்கேற்புBody:கடலூர்
அக்டோபர் 13,

கடலூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் 3 உலக சாதனை நிகழ்ச்சிகள் நிகழ்த்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
கடலூர் கிழக்கு மாவட்ட விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் சார்பில் 3 உலக சாதனை நிகழ்வுகள் நிகழ்த்தும் நிகழ்ச்சி கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்வினை அக்கட்சியின் நிறுவனத் தலைவர் தொல்.திருமாவளன் எம்.பி பார்வையிட்டார்.
பின்னர், யுனிவர்சல் அச்சீவர்ஸ் புக் ஆஃப் ரெக்கார்ட், பியூச்சர்ஸ் கலாம்ஸ் புக் ஆஃப் ரெக்கார்ட் சார்பில் 3 உலக சாதனைகள் நிகழ்த்தப்பட்டதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது. அதில், 10,465 பனை விதைகளைக் கொண்டு தொல்.திருமாவளவனின் முகம் உருவாக்கப்பட்டது சாதனையாக கருதப்பட்டது. அதேப்போன்று, 3,046 பேர் திருமாவளவனின் முகமூடியை அணிந்துக் கொண்டு அம்பேத்கரின் உருவமாக நின்றனர். அவர்களே நெகிழிக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கையில் துணிப்பையுடன் உறுதிமொழி எடுத்துக் கொண்டதும் மற்றொரு சாதனை நிகழ்வாக கருதப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

இச்சான்றிதழை பெற்ற பின்னர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 17 முதல் பனை விதைகளை ஊன்றுவது தொடர்பான செயல் திட்டத்தினை நாங்கள் முன்னெடுத்தோம் தொடர்ச்சியாக பல லட்சக்கணக்கான பனை விதைகளை ஊன்றினோம் அதை தொடர்ந்து தீவிரப்படுத்த வேண்டும் என்கின்ற நோக்கத்தில் இன்று கடலூரில் 10 ஆயிரத்து 465 பனை விதைகளை கொண்டு என்னுடைய முகத்தினை வடிவமைக்கும் ஒரு செயல்திட்டம் உலக சாதனை என்ற அடிப்படையில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது அதேபோல் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் உருவத்தை என்னுடைய முகமூடியை அணிந்து அதில் 3046 அவருடைய உருவமாக கட்டமைத்து இருக்கிறார்கள் நிறைவு செய்திருக்கிறார்கள் இந்த இரண்டு நிகழ்வுகளும் இதுவரை செய்யப்படாத ஒன்று ஒரு புதிய முயற்சி புதிய சாதனை உலக சாதனை என்று இதை நிறைவேற்றி இருக்கிறோம் இதனுடைய நோக்கம் புரட்சியாளர் அம்பேத்கார் கருத்துகளை மேலும் தீவிரமாக முன்னெடுத்து செல்வது என்பது தமிழ் மண்ணில் நீண்ட நெடுங்காலமாக பாதுகாத்து வருகின்ற இயற்கை பேரழிவுகளில் இருந்து மண் வளத்தை நீர்வளத்தைபாதுகாத்து வருகின்ற பனை மரத்தை பாதுகாக்க வேண்டும்அதை மென்மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என்கின்ற அடிப்படையில் இந்த இரண்டு உலக சாதனை நிகழ்வுகளை அரங்கேற்ற இருக்கிறோம் அத்துடன் மண்வளத்தை பெரிதும் பாதிக்கக் கூடிய மக்காத பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த கூடாது குறிப்பாக பிளாஸ்டிக் பைகளை முற்றிலும் கைவிட வேண்டும் என்று மக்களுக்கு உணர்த்த கூடிய வகையில் அம்பேத்கர் முகத்தை வடிவமைத்து நின்ற 3046 பேரும் தனது கைகளில் துணிப்பைகளை இந்திரா ஸ்டிக்கை ஒழிப்போம் துணி பைகளை பயன்படுத்துவோம் என்று முழக்கம் எழுப்பி இருக்கிறோம் ஒரே நேரத்தில் மூன்று உலக சாதனை நிகழ்ச்சியாக நடைபெற்றிருப்பது உந்துதலை அளிக்கக்கூடியது ஊக்கத்தை அளிக்கக்கூடிய ஒரு நிகழ்வாக நாங்கள் கருதுகிறோம்.

இந்த சந்திப்பு தமிழை தமிழ்நாட்டை தமிழ் மக்களை பற்றிய உரையாடலை உலகம் தழுவிய அளவில் நிகழ்த்துவதற்காக ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.பிரதமர் மோடி அவர்களும் சீன அதிபர் ஜின்பிங் அவர்களும் இரண்டு நாட்கள் மாமல்லபுரத்தில் தங்கியிருந்த அதன் மூலம் தமிழர்களின் தொன்மையான நாகரீகம் குறித்த உரையாடல் வரலாற்று பூர்வமான சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் இருந்த உறவுகள் ஆகியவை குறித்து ஒரு விரிவான உரையாடல் உலகம் தழுவிய அளவில் நிகழ்ந்திருக்கிறது என்கின்ற வகையில் நான் மகிழ்ச்சி அடைகிறேன் மற்றபடி இதில் அரசியல் ரீதியாக கருத்து சொல்ல விரும்பவில்லை.

வருகின்ற 2 சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெறும் என்கின்ற அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கிறது வருகிற 16-ஆம் தேதி நான்குநேரி நான் காங்கிரஸ் வேட்பாளருக்கு வாக்கு சேகரிப்பில் 17ஆம் தேதி விக்கிரவாண்டியில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குசேகரிக்க இருக்கின்றேன்.

கீழடி தமிழினத்தின் தலைசிறந்த அடையாளம் தமிழர்கள் சாதி சமயமற்ற வாழ்க்கையை வாழ்ந்து இருக்கிறார்கள் என்பதை உறுதிப்படுத்தக் கூடிய பல சான்றுகளை நமக்கு தந்திருக்கிறது 2500 ஆண்டுகளுக்கு முன்பே அவர்கள் நீர் மேலாண்மையில் மிகச் சிறந்த ஞானம் உள்ளவராக இருந்திருக்கிறார் என்பதும் அதுபோல் அங்கு கிடைத்த பானை ஓடுகளில் பதிவாகியிருக்கிறது எண்களும் எழுத்துக்களும் நம்முடைய அறிவியல் வளர்ச்சியை பரிணாமத்தை உலகுக்கு உணர்த்துகிறது எனவே தமிழினத்தின் தலை நிமிர்வு கான அடையாளம் கீழடி கூறினார்.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே ஒரு தலித் மாணவனை சக மாணவனை முதுகில் ஆழமாக பிளேடு கொண்டு கிழித்து இருக்கிறான் இப்படிப்பட்ட இந்த கொடுரமான செயல் தொடர்நது வளர்ந்து வருதறக்கு காரணம் அரசியல் களத்தில் இருக்கக்கூடிய சாதியவாதிகள் மதவாதிகள் தான் சின்னஞ்சிறு பிஞ்சுகளின் கைகளில் சாதி அடையாளங்களை கொண்ட கயிறுகளை கட்டி விடுவது அவர்களின் பயன்படுத்தக் கூடிய பொருட்களில் சாதி அடையாளங்களை ஒட்டி அனுப்புவது இப்படி பிஞ்சு உள்ளத்தில் சாதிய அரசியல்வாதிகள் ஆதாயம் கருதி பரப்பி அதன் விளைவாக இன்றைக்கு பள்ளி மாணவர்களிடையே சாதிய உணர்வு மேலோங்கி இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது இதற்கு காரணமானவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேட்டியளித்தார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.