கடலூர்: நெய்வேலி என்எல்சி(NLC) இந்தியா நிறுவனத்தில் உள்ள இரண்டாவது சுரங்கத்தில், இன்று காலை 6 மணி ஷிப்டில் சுமார் 200 தொழிலாளர்கள் சென்றுள்ளனர். அப்போது வழக்கம்போல் கேன்டீனில் சுரங்கத் தொழிலாளர்கள் உணவு அருந்தினர். அங்கு தயிர் சாதமும் வடையும் கொடுக்கப்பட்டுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த தொழிலாளர்கள் கேன்டீன் நிர்வாகத்திடம் கேட்டுள்ளனர். இந்நிலையில், முதலாவதாக சாப்பிட்ட 20க்கும் மேற்பட்டோர் வாந்தி எடுத்து கேன்டீன் முன்பே மயங்கி விழுந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அவர்கள் உடனடியாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில், சுரங்கத் தொழிலாளிகளுக்கு வழங்கப்பட்ட உணவில் எலி கிடந்ததாக குற்றசாட்டு எழுந்துள்ளது. உணவில் எலி கிடந்ததாக வெளியான புகைப்படமும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: போதையில் சாலையில் நடந்தது குத்தமா..? சென்னை பகீர் சிசிடிவி காட்சி!