ETV Bharat / state

'வாழைத்தார் மீது பெண் செய்யும் செயலை பாருங்க' - உஷார் மக்களே! - chemicals spraying bananas

கடலூரில் வாழைத்தாரில் ரசாயனம் தெளிக்கும் பெண்ணின் புகைப்படம் சமூக வலைதளத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Dec 25, 2022, 7:52 PM IST

Updated : Dec 25, 2022, 8:09 PM IST

கடலூர்: விவசாயிகள் தாங்கள் பயிரிடும் விவசாய காய்கறிகள், பழங்கள், கீரை வகைகளை தாங்களே நேரடியாக கொண்டு வந்து உழவர் சந்தையில் விற்று வருகின்றனர். அதனை எளிதில் பொதுமக்கள் வாங்கி பயன்பெற்று வருகின்றனர். அந்த வகையில், கடலூர், மஞ்சக்குப்பம் மைதானத்தில் இயங்கி வரும் தற்காலிக உழவர் சந்தையில் நாள்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் பயிரிட்ட வாழை பழத்தார்களைக் கொண்டு வந்து விற்று வருகின்றனர்.

இந்நிலையில் கடலூரில் ஒரு பெண் பத்துக்கும் மேற்பட்ட வாழைத்தார்களை விரைவில் பழுக்க வைக்க, கேடு விளைவிக்கும் ரசாயன கலவையை தெளித்துள்ளார். இவ்வாறான செயல்களில் ஈடுபடுவோர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூக ஆர்வலர்கள் மாநில சுகாதாரத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. இதன் விளைவாக, ரசாயனம் கலந்த அந்தப் பழங்களை வாங்கி சாப்பிடுவோர் பல வகையான நோய்த் தாக்குதலுக்கு ஆளாகக் கூடும். இதனால், வாழைப்பழத்தை விரும்பி சாப்பிடுபவர்கள் அச்சத்தில் உள்ளனர்.

இதையும் படிங்க: கேரளாவில் வேகமாகப் பரவும் பறவைக் காய்ச்சல் - 6,000 பறவைகள் அழிப்பு!

Last Updated : Dec 25, 2022, 8:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.