ETV Bharat / state

தனியாக இருந்த பெண்ணிடம் மர்ம நபர்கள் கைவரிசை! - cuddalore

கடலூர்: தனியாக இருந்த பெண்ணைத் தாக்கிவிட்டு, வீட்டில் இருந்த தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.

நகை திருட்டு
author img

By

Published : Jun 16, 2019, 10:52 PM IST

கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன் குமார். இவருக்கு திவ்யபாரதி என்ற மனைவியும், ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். பிரவீன் குமார் தனது வேலை நிமித்தமாக வெளியூருக்குச் சென்று விட்ட நிலையில், திவ்யபாரதி தனது ஒரு வயது குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

பெண்ணைத் தாக்கி நகைகள் கொள்ளை!

இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள், நேற்றிரவு வீட்டிற்குள் நுழைந்து, தூங்கிக்கொண்டிருந்த திவ்யபாரதியை சரமாரியாகத் தாக்கிவிட்டு, அவர் கழுத்தில் அணிந்திருந்த தங்கச் சங்கிலி, பீரோவில் இருந்த நகைகள் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

இந்நிலையில், இன்று காலை திவ்யபாரதியின் தாய் அமுதா வீட்டிற்கு வந்து பார்த்தபோது, அவரது மகள் மயங்கிய நிலையில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியோடு திவ்ய பாரதியை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார்.

இதனைத் தொடர்ந்து, இச்சம்பவம் தொடர்பாக புதுநகர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Intro:வீட்டில் தனியாக இருந்த பெண்ணை தாக்கி நகைகள் கொள்ளை

Body:கடலூர்
ஜூன் 16,

கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் பிரவீன்குமார் இவரது மனைவி இது திவ்யபாரதி 25 இவர்களுக்கு ஒரு வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் பிரவீன் குமார் தன்னுடைய வேலை விஷயமாக வெளியூருக்குச் சென்று விட்டார். வீட்டில் திவ்யபாரதி மற்றும் அவருடைய ஒரு வயது குழந்தையுடன் தனியாக இருந்துள்ளார் இதனை நோட்டமிட்ட மர்ம நபர் நள்ளிரவில் திவ்ய பாரதியின் வீட்டிற்குள் நுழைந்து தூங்கிக்கொண்டிருந்த திவ்ய பாரதியை சரமாரியாக தாக்கியுள்ளனர் பின்னர் அவர் கை கால்களை கட்டி போட்டு அவள் குழந்தையை துணியால் கட்டி உள்ளனர் இதில் பலத்த காயமடைந்த திவ்யபாரதி சிறிது நேரத்தில் மயக்கம் அடைந்தார். பின்னர் திவ்யபாரதியின் கழுத்தில் கிடந்த தங்கச் சங்கிலி மற்றும் பீரோவில் இருந்த நகைகள் மர்ம நபர்கள் கொள்ளையடித்து தப்பிச் சென்றுவிட்டனர்.

இந்நிலையில் இன்று திவ்யபாரதியின் தாய் அமுதா காலை வீட்டிற்கு வந்து பார்த்தபோது திவ்யபாரதி தாக்கப்பட்டு கைகள் கட்டப்பட்ட நிலையில் மயக்கம் அடைந்து கிடந்த இருந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அமுதா அக்கம் பக்கத்தினர் உதவியுடன் திவ்ய பாரதியை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர் அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர் மேலும் திவ்ய பாரதியின் குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் நலமுடன் இருப்பதாக தெரிவித்தனர் மேலும் இதுகுறித்து புதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.