ETV Bharat / state

விவசாயிகளிடம் பத்தாயிரம் கிலோ உளுந்தை வாங்கிக்கொண்டு, எஸ்கேப் ஆன பெண் கைது! - urad dal

கடலூரில் விவசாயிகளிடம் பத்தாயிரம் கிலோ உளுந்தை வாங்கிவிட்டு, பணம் தராமல் இன்பச்சுற்றுலா சென்ற பெண் கைது செய்யப்பட்டார்.

விவசாயிகளிடம் பத்தாயிரம் கிலோ உளுந்தை வாங்கி இன்பச் சுற்றுலா சென்று ஏமாற்றிய பெண் கைது…..

author img

By

Published : Jul 29, 2022, 5:16 PM IST

கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அருகில் சரவணன் என்பவர், காட்டுமன்னார்கோவில் பகுதியில் வீராணம் டெல்டா விவசாயிகளை ஒருங்கிணைத்து 'வீராணம் டெல்டா உழவர் உற்பத்தியாளர் நிறுவனம்' என்ற பெயரில் விளைபொருட்களை வாங்கி வணிகம் செய்து வருகின்றார்.

இவரிடம் மணிவண்ணன் என்னும் சேலத்தைச்சேர்ந்த முகவர் கறுப்பு உளுந்தை வாங்கி, விளம்பரம் செய்து விற்று, அதன் அசல் தொகையை சரவணனிடம் கொடுத்துவந்தார்.

இந்நிலையில் மணிவண்ணனிடம், ஈரோடு மாவட்டம் பெருந்துறையைச் சேர்ந்த நிலோஃபர் (38) எனும் பெண் தான் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் உளுந்து உள்ளிட்ட தானியங்களை வாங்கி, அதனை சில்லறையாக விற்பனை செய்து வருவதாகத் தெரிவித்துள்ளார். அதேபோல் தனக்கு உளுந்தினை வாங்கித்தர மணிவண்ணனிடம் உதவி கேட்டுள்ளார். மணிவண்ணனும் இதுதொடர்பாக உளுந்து கொடுத்து உதவுமாறு சரவணனிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதை நம்பிய சரவணன் சுற்றியுள்ள விவசாயிகளிடம் இருந்து கடந்த ஏப்ரல் மாதத்தில், ரூபாய் ஏழு லட்சத்திற்கும்மேல் மதிப்புடைய 10 ஆயிரத்து 350 கிலோ உளுந்தை வாங்கி, அதனை மணிவண்ணன் என்பவர் மூலம் நிலோஃபருக்கு அனுப்பி வைத்தார். ஆனால், உளுந்தை வாங்கிக்கொண்ட நிலோஃபர், அதற்கான பணத்தைத் தராமல் மோசடி செய்துவிட்டார். எனவே, நிலோஃபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடலூர் எஸ்.பி. சக்திகணேசனிடம் பாதிக்கப்பட்ட சரவணன் புகார் அளித்தார்.

இதையடுத்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினருக்கு உத்தரவிடப்பட்டது. உத்தரவின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் பெருந்துறை சென்று, நிலோஃபரை விசாரணை நடத்தினார்கள்.

அப்போது நிலோஃபர் காவலர்களிடம் கூறுகையில், ’தான் ஆட்டோ ஓட்டி வந்ததாகவும், அதில் போதுமான வருமானம் கிடைக்காததால் விவசாயப் பொருட்களை கொள்முதல் செய்து சில்லறை வணிகத்தில் விற்பனை செய்து வந்ததாகவும்’ தெரிவித்தார்.

மேலும் அந்த சமயத்தில் சேலத்தைச்சேர்ந்த மணிவண்ணன் என்பவர் கறுப்பு உளுந்து விற்பனைக்கு உள்ளதாக விளம்பரம் செய்ததைப்பார்த்து அவரிடம் 10,350 கிலோ உளுந்தை வாங்கிக்கொண்டு, அதை மொத்தமாக வேறு ஒருவரிடம் விற்று, அதன் மூலம் பெற்ற பணத்தைத் தான் ஜாலியாக சுற்றுலா தலங்களுக்குச்சென்று செலவழித்துவிட்டதாகவும் தெரிவித்தார். இதையடுத்து காவலர்கள் நிலோஃபர் மீது வழக்குப் பதிவு செய்ததோடு கைது செய்து கடலூர் சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: பேக்கரி கடையில் வாங்கிய தின்பண்டத்தில் கரப்பான் பூச்சி-வாடிக்கையாளர் அதிர்ச்சி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.