கடலூர்: அரிசிபெரியாங்குப்பத்தை சேர்ந்தவர் ரம்யா (வயது 27). இவர் கடலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவரும் கடலூர் புதுநகரை சேர்ந்த கார்த்திகேயன் என்பவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் கடந்த மாதம் 6-ந் தேதி திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் திருமணம் முடிந்து கார்த்திகேயன் வீட்டிற்கு வந்த ரம்யா கழிவறை வசதி இல்லாததால், மறுநாளே தனது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார்.
அப்போது வேறு வீடு பார்த்து அழைத்து செல்வதாக கூறிய கார்த்திகேயன், வேறு வீடு பார்க்கவில்லை தன் வீட்டிலும் கழிவறை கட்ட முயற்சி செய்யவில்லை இதனால் ரம்யாவுக்கும் கார்த்திகேயனுக்கும் மனக்கசப்பு ஏற்பட்டு ரம்யாவை கார்த்திகேயன் தகாத வார்த்தையால் திட்டியதால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த ரம்யா, வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டுக் கொண்டார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது தாய் மஞ்சுளா அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ரம்யாவை மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி, ரம்யா பரிதாபமாக உயிரிழந்தார்.
![கணவன் வீட்டில் கழிவறை இல்லாததால் மனைவி தற்கொலை…போலீஸ் விசாரணை](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-cdl-toiletissue-susaid-10047_10052022113656_1005f_1652162816_239.jpg)
இதுகுறித்து மஞ்சுளா, திருப்பாதிரிப்புலியுர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ரம்யாவுக்கு திருமணமாகி ஒரு மாதமே ஆவதால், அவரது சாவுக்கான காரணம் குறித்து கடலூர் கோட்டாட்சியர் அதியமான் கவியரசும், விசாரித்து வருகிறார்.
![கணவன் வீட்டில் கழிவறை இல்லாததால் மனைவி தற்கொலை…போலீஸ் விசாரணை](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-cdl-toiletissue-susaid-10047_10052022113656_1005f_1652162816_488.jpg)
இதையும் படிங்க: கல்லூரி மாணவி தற்கொலை - போலீஸ் விசாரணை