இது குறித்து அவர் கூறுகையில், “சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் தமிழ்நாடு ரேஷன் கடை பணியாளர் சங்கம் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தியது. அதன்படி ஊதிய மாற்று விகிதத்தை அறிவிப்பதற்காக குழு அமைத்து, அதன் அறிக்கையின்படி தற்போது ஊதிய மாற்றத்தை அரசு அறிவித்துள்ளது.
டிஎன்பிசிக்கு இணையான ஊதியம் கேட்டோம், அதனை அளிக்கவில்லை, ஆனால் ஊதிய மாற்று விகிதத்தை அரசு அறிவித்துள்ளது. ஊதிய மாற்று விகிதத்தை நாங்கள் வரவேற்கிறோம். ஓய்வூதியம் ரூ.1000 மட்டுமே அறிவித்துள்ளனர்.
30 ஆண்டு காலம் பணியிலிருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு அறிவித்துள்ள தொகை போதுமானதாக இல்லை. எனவே ஓய்வுத் தொகை குறித்த அறிவிப்பை நிராகரிக்கிறோம். மேலும் பணியிலிருந்து ஓய்வு பெறும் போது வழங்கும் சம்பளத்தில் பாதியாகவோ அல்லது குறைந்த பட்சம் 10,000 ஆகவோ ஓய்வூதியம் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கிறோம்.
ஊதிய மாற்று விகிதத்தை 1-11-2020 முதல் முன் தேதியிட்டு ஊதியம் வழங்க கேட்டுக்கொள்கிறோம். ஓய்வூதியம், ஊதிய மாற்ற விகிதம் குறித்து சேலம் மாநில செயற்குழு கூட்டத்தில் கூடி விவாதிக்க இருக்கிறோம்” என்றார்.
இதையும் படிங்க: இடைக்கால பட்ஜெட்டை முழுவதுமாக புறக்கணிக்கிறது திமுக - துரைமுருகன் அறிவிப்பு!