கடலூர்: கடந்த ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இது கடந்த வாரம் கல்லணை வழியாக, கீழ் அணையை வந்தடைந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் (ஜூலை.09) கீழ் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது.
இந்த நீர் வடவாறு வழியாக, காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வீராணம் ஏரிக்கு 500 கன அடி வீதம் வந்து கொண்டிருக்கிறது. இது குறித்து வீராணம் உதவி செயற்பொறியாளர் அருணகிரி பேசுகையில், “நீர்வரத்து நாளை பிற்பகல் 39 கன அடியை எட்டும்.
அதைத் தொடர்ந்து இன்னும் ஒரு சில தினங்களில் வீராணத்தில் இருந்து, முதற்கட்டமாக சென்னையின் குடிநீர் தேவைக்காக 77 கனஅடி நீர் அனுப்பும் பணி தொடங்கப்படும்” என்றார்.
இதையும் படிங்க: தென்மேற்கு பருவக்காற்று: நீலகிரி, கோயம்புத்தூரில் மிக கனமழை பெய்யும்