கடலூர் மாவட்டம் வேப்பூரை அடுத்து அமைந்துள்ள பெரியநெசலூர் கிராமத்தின் அருகே சேலம் - சிதம்பரம் புறவழிச்சாலையில் சேலத்திற்கு மீன் ஏற்றிச்சென்ற வேனும், விருத்தாசலம் நோக்கி கோயிலுக்குச் சென்றவர்களின் காரும் மோதிக் கொண்டன.
இந்த விபத்தில் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் ஐந்து பேர் படுகாயம் அடைந்தனர்.

படுகாயமடைந்த ஐந்து பேரை பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். இந்தச் சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். இந்தக் காரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் பயணித்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:இரு சக்கர வாகனத்தில் பயணித்த பெண்ணை நேருக்கு நேர் மோதி தூக்கிய கார்; பதை பதைக்கும் வீடியோ!