கடலூர் மாவட்டத்தைச்சேர்ந்த 14 வயது பெண் தனது உறவுக்காரப்பெண் ஒருவருடன் கடைக்குச் சென்று வீடு திரும்பியுள்ளார். அப்போது, வெங்கடேசன், தினேஷ், மதுரகவி என்கிற மூன்று பேர் அந்த இரண்டு பெண்களையும் வழிமறித்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர்.
இது குறித்து அந்த 14 வயது பெண் தனது தந்தையிடம் தெரிவித்துள்ளார். இதன் பின்னர் அவளின் பெற்றோர் சென்று அந்த மூவரையும் தட்டிக்கேட்டுள்ளனர். இதில், ஆத்திரமடைந்த அவர்கள் சிறுமியின் பெற்றோரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதனையடுத்து சிறுமியின் தந்தை சம்பவங்கள் குறித்து கிள்ளை காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதனடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவலர்கள், வெங்கடேசன், தினேஷ் ஆகிய இருவரையும் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். மேலும், தலைமறைவாகவுள்ள மதுரகவியைக் காவலர்கள் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: 13 வயது சிறுமியை இரண்டு ஆண்டாக சீரழித்த ஐவர் கும்பல்!