ETV Bharat / state

கடலூரில் கொலை வழக்கில் 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது! - two men arrested in murder case

கடலூரில் கொலை வழக்கில் கைதான 2 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

கடலூரில் கொலை வழக்கில் இருவர் கைது
கடலூரில் கொலை வழக்கில் இருவர் கைது
author img

By

Published : Jun 12, 2021, 9:47 PM IST

கடலூர்: எஸ்.என்.சாவடியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் பிரபு. இவரை அதேப்பகுதியைச் சேர்ந்த இளங்கோ மகன் தங்கப்பாண்டியன் என்ற ஏழுமலையை முன்விரோதம் காரணமாக கொலை செய்தார். இதனால் காவல் துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். ஏழுமலை மீது கொலைமுயற்சி, அடிதடி, கஞ்சா வழக்குகள் 10 நிலுவையில் உள்ளது தெரிய வந்தது.

இதேப்போல், கடலூர் வட்டம் சிங்கிரிகுடியில், புதுச்சேரி மாநிலம் நோணாங்குப்பத்தைச் சேர்ந்த சிதம்பரம் மனைவி விஜயலட்சுமி என்ற சாந்தா, அவரது மகள் மாதங்கி என்ற சந்தியா ஆகியோர் கடந்த மார்ச் 1 ஆம் தேதி கொலை செய்யப்பட்டனர். இதுதொடர்பாக ரெட்டிச்சாவடி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்ததோடு, புதுச்சேரி மாநிலம் நைனார்மண்டபத்தைச் சேர்ந்த ஆ.இருசப்பன் (49) என்பவரை கைது செய்தனர். இவர், ஏற்கனவே ஆதாய கொலைக்காக நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு சிறையில் இருந்தவர்.

இந்நிலையில், இருவரையும் குண்டர் தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட காவல்துறை பரிந்துரைத்தது. அதற்கான உத்தரவினை ஆட்சியர் கி.பாலசுப்பிரமணியம் வழங்கினார். இதனையடுத்து இருவரின் மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பட்டப்பகலில் இளைஞர் வெட்டிக் கொலை: குற்றவாளிகளுக்கு போலீஸ் வலை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.