கடலூர் மாவட்டம் வெங்கடாம்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த புஷ்பராஜ் (16), ராம்குமார் (15) என்கிற இரண்டு சிறுவர்கள், தனது நண்பர்களுடன் வேணுகோபால சுவாமி தீர்த்த குளத்தில் குளிக்கச் சென்றுள்ளனர்.
குளத்தில் குளித்துக்கொண்டிருக்கையில் இருவருக்கும் நீச்சல் தெரியாததால், நீரில் மூழ்கியுள்ளனர். இதைப் பார்த்த மற்ற சிறுவர்கள், ஓடிச்சென்று பெரியவர்களிடம் கூறியுள்ளனர். உடனடியாக குறிஞ்சிப்பாடி தீயணைப்புத் துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர், இரண்டு சிறுவர்களையும் மீட்டெடுத்தனர். அதில், ராம்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
புஷ்பராஜ் குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனை கொண்டுசெல்லும் வழியிலே உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: உத்திரகாவேரி ஆற்றில் மூழ்கி 8ஆம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு!