ETV Bharat / state

’ஆதார் கார்டும் 500 ரூபாயும் தாங்க; அரை மணி நேரத்துல இ-பாஸ் ரெடி பண்றேன்’ - ஆடியோவால் சிக்கிய டிராவல்ஸ் உரிமையாளர் - travels owner arrested

கடலூர்: இ-பாஸ் தேவைப்படுபவர்கள் தம்மிடம் ஆதார் கார்டையும் 500 ரூபாய் பணத்தையும் கொடுத்தால், அரை மணி நேரத்தில் இ-பாஸ் எடுத்து தருவதாக கூறி டிராவல்ஸ் உரிமையாளர் ஒருவர் பேசிய ஆடியோ வைரலானதையடுத்து, அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

travels owner arrested
travels owner arrested
author img

By

Published : Aug 5, 2020, 4:22 AM IST

கரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் வெளியூர், வெளி மாநிலங்களுக்கு செல்பவர்களுக்கு கட்டாயம் இ-பாஸ் இருக்க வேண்டும் என அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி ஊரடங்கு தொடங்கியது முதல் அவசர தேவைகளுக்காக வெளியூர் செல்பவர்களுக்கு இ-பாஸ் வழங்கப்பட்டுவருகிறது.

இறப்பு, திருமணம், மருத்துவச் சிகிச்சை ஆகியவற்றிற்கு மட்டுமே இ-பாஸ் வழங்கப்படும். இவை தவிர்த்து மற்ற காரணங்களுக்கு இ-பாஸ் மறுக்கப்படும். பலர் பலமுறை முயற்சி செய்தும் கிடைக்காமல் ஏமாற்றமடைந்துள்ளனர். ஆனால் தற்போது கடலூரில் ஒரு டிராவல் உரிமையாளர் அவருடைய வாட்ஸ்அப் குழுவில் பதிவிட்டுள்ள ஆடியோ அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

அதாவது டிராவல்ஸ் நடத்தும் தம்மிடம் இ-பாஸ் தேவைப்படுபவர்கள் ஆதார் கார்டை மட்டும் அனுப்பினால், அரைமணி நேரத்தில் அவர்களுக்கு இ-பாஸ் எடுத்துக் கொடுக்கப்படும் எனவும், அது போலி அல்ல; உண்மையானது என்றும் கூறுகிறார். ஒவ்வொரு பாஸ்க்கும் 500 ரூபாய் கொடுத்தால் போதும் எனவும், இதுவரையில் 50 ஆயிரம் இ-பாஸ் எடுத்துக் கொடுத்துள்ளதாகவும் அந்த ஆடியோவில் பேசியுள்ளார்.

இந்த ஆடியோ தற்போது கடலூரில் வைரலாகப் பரவிவரும் நிலையில், இவர்களுக்கு மட்டும் எப்படி இ-பாஸ் கிடைக்கின்றது என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இதற்கு விரிவான விசாரணை வேண்டும் என கோரிக்கை வைக்கும் பொதுமக்கள், இதில் ஈடுபட்டுள்ளவர்கள் அனைவரையும் கைதுசெய்ய வேண்டும் என்றும் கூறுகின்றனர்.

இதனைத் தொடர்ந்து அந்த ஆடியோவில் பேசிய கடலூர் சாவடி பகுதியைச் சேர்ந்த ராஜாராமன் என்பவரை தனிப்படை காவல் துறையினர் கைதுசெய்தனர். கைதுசெய்யப்பட்ட ராஜாராமனை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க: இ-பாஸ் முறைகேடு - அமைச்சர் எச்சரிக்கை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.