கடலூர்: கடலூர் மாவட்டம் பெரும்பாலும் இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்படக்கூடிய மாவட்டம் என்பதால் இயற்கை சீற்றங்களில் இருந்து கடலூரை காக்கும் நோக்கில் ஒரு லட்சம் பனை விதை கன்றுகள் நடும் விழா கடலூர் அடுத்த தூக்கணாம்பாக்கம் கிராமத்தில் நேற்று (அக்.4) நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் எம்.சி சம்பத் பனை விதைகளை நட்டு மரக்கன்றுகள் நடும் விழாவை தொடங்கிவைத்தார்.
அதனைத் தொடர்ந்து கடலூர் கடற்கரைச் சாலையில் உள்ள பெரியார் அரசு கலைக் கல்லூரியில் தன்னார்வ அமைப்புகளுடன் ஒன்றிணைந்து நூற்றுக்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை அமைச்சர் எம்.சி சம்பத் நட்டார்.
இந்நிலையில், “ஆற்றங்கரை ஓரங்களில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பனை விதைகளை விதைப்பது மூலமாக நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து, மண் வளம் பெறும் என்ற அடிப்படையில் இந்த முயற்சியை மேற்கொள்வதாகவும், இந்தாண்டு 75,000 பனைக் கன்றுகள் தயார் நிலையில் உள்ளன. தன்னார்வ அமைப்புகளுடன் ஊராட்சி அமைப்புகள் மூலம் பனைமரங்கள் நிறைந்த மாவட்டமாக கடலூர் மாவட்டத்தை உருவாக்குவதே எண்ணம்” என அமைச்சர் எம்.சி சம்பத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 8 லட்சம் பனை விதைப்புப் பணிகள்; தொடங்கிவைத்த பெரம்பலூர் ஆட்சியர்!