கடலூர்: சிதம்பரம் அருகே உள்ள தம்பிக்கு நல்லான் பட்டினம் கிராமத்தில் வெள்ளாறு ஓடுகிறது. இந்த வெள்ளாற்றில் இருந்து இரவு 10 மணி அளவில் முதலை ஒன்று கரையேறி குடியிருப்புக்குள் புகுந்தது. இதனைக் கண்டு அப்பகுதி மக்கள் அலறியடித்து ஓடினர்.
அப்பகுதி இளைஞர்கள் ஒன்று சேர்ந்து முதலையை இருட்டிலேயே தேடிப் பிடித்து அதனை கயிற்றால் கட்டி வனத்துறை அலுவலர் புஷ்பராஜிடம் ஒப்படைத்தனர். மேலும், வனத்துறை அலுவலர் புஷ்பராஜ் அதனை எடுத்துக்கொண்டு சிதம்பரம் அருகே உள்ள வர்க்காரமாரி ஏரியில் கொண்டுபோய் பாதுகாப்பாக விட்டார்.
இந்த முதலை 6 அடி நீளம் 100 கிலோ எடை கொண்டது. தம்பிக்கு நல்லான் பட்டினம் கிராமத்தில் உள்ள குடியிருப்புக்குள் முதலை புகுந்ததால், அந்த ஊரில் உள்ள பொதுமக்கள் அச்சத்துடன் உள்ளனர்.
இதையும் படிங்க : மீண்டும் பறக்கிறது மம்தா கொடி: மேற்கு வங்க எக்ஸிட் போல் முடிவுகள்