ETV Bharat / state

தெலங்கானா பெண் மருத்துவர் எரித்துக் கொலை எதிரொலி: பெட்ரோல் இனி பாட்டில்களில் வழங்கப்படாது! - Telangana woman doctor burned death

கடலூர்: தெலங்கானாவில் பெண் மருத்துவர் எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் இனி பெட்ரோலை பாட்டில்களில் வழங்குவது நிறுத்தப்படுவதாக பெட்ரோலிய வணிகர் சங்கம் அறிவித்துள்ளது.

Telangana woman doctor burned to death Echo, No longer offered in petrol bottles
Telangana woman doctor burned to death Echo, No longer offered in petrol bottles
author img

By

Published : Dec 5, 2019, 10:20 PM IST

சில நாட்களுக்கு முன்பு தெலங்கானா மாநிலத்தில் பெண் மருத்துவர் ஒருவர் கூட்டு பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்தியா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய அச்சம்பவத்தைத் தொடர்ந்து, தற்போது தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் சேமிப்பு நிலையங்களிலிருந்து பாட்டில்கள் மூலம் பெட்ரோல் வழங்குவது தடைசெய்யப்படுவதாக பெட்ரோலிய வணிகர் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

இது குறித்து, கடலூரில் பேட்டியளித்த பெட்ரோலிய வணிகர் சங்கத் தலைவர் முரளி, ”பல ஆண்டுகளாகவே பாட்டில்களில் பெட்ரோல் வழங்கக் கூடாது என்ற தடை இருந்தாலும், தவிர்க்க முடியாத சில காரணங்களால் வழங்கப்பட்டுவந்தது. தற்போது தெலங்கானாவில் நடைபெற்ற சம்பவத்தைத் தொடர்ந்து பொதுமக்கள், பெட்ரோல் சேமிப்பு நிலைய ஊழியர்கள், டீலர்கள் ஆகியோரின் பாதுகாப்புக் கருதி பாட்டிலில் பெட்ரோல் வழங்குவது இன்று முதல் தடைசெய்யப்படுகிறது” என்றார்.

இனி பெட்ரோல் பாட்டில்களில் வழங்கப்படாது

இந்த அறிவிப்பினைத் தொடர்ந்து கடலூர் மாவட்டம் முழுவதும் அனைத்து பெட்ரோல் சேமிப்பு நிலையங்களிலும் பாட்டில்களில் பெட்ரோல் வழங்கப்படமாட்டாது என்ற அறிவிப்பு சுவரொட்டி ஒட்டப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பெண் மருத்துவர் கொலை வழக்கு: காட்டிக்கொடுத்த சிசிடிவி காட்சி...

Intro:தமிழகம் முழுவதும் பெட்ரோல் பங்குகளில் பாட்டில்களில் பெட்ரோல் வழங்குவது இன்றுமுதல் நிறுத்தப்படுவதாக பெட்ரோலிய வணிகர் சங்கத்தினர் அறிவிப்பு
Body:கடலூர்
டிசம்பர் 5,

சில நாட்களுக்கு முன்பு தெலுங்கானா மாநிலத்தில் பெண் மருத்துவர் ஒருவர் பெட்ரோல் ஊற்றி எரித்து கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தியா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இந்த சம்பவத்தை தொடர்ந்து தற்போது தமிழகம் முழுவதும் பெட்ரோல் பங்குகளில் இருந்து பாட்டீல்கள் மூலம் பெட்ரோல் வழங்குவது தடை செய்யப்படுவதாக பெட்ரோலிய வணிகர் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

இதுகுறித்து கடலூரில் பேட்டியளித்த பெட்ரோலிய வணிகர் சங்க தலைவர் முரளி பல ஆண்டுகளாகவே பாட்டில்களில் பெட்ரோல் வழங்கக் கூடாது என்ற தடை இருந்தாலும் தவிர்க்க முடியாத சில காரணங்களால் பெட்ரோல் வழங்கப்பட்டு வந்ததாகவும் தற்போது தெலுங்கானாவில் நடைபெற்ற சம்பவத்தை தொடர்ந்து பொதுமக்களின் பாதுகாப்பு கருதியும், பெட்ரோல் பங்க் ஊழியர்கள் மற்றும் டீலர்களில் பாதுகாப்பு கருதியும் பெட்ரோல் வழங்குவது இன்றுமுதல் ஏற்படுவதாக தெரிவித்தார். தமிழகம் முழுவதும் உடனடியாக இது நடைமுறைப் படுத்தப் படுவதாக தெரிவித்த அவர் எந்த பெட்ரோல் பங்கிலும் இனி பாட்டில்களில் பெட்ரோல் வழங்கப்படாது என்று தெரிவித்தார். இந்த அறிவிப்பினை தொடர்ந்து கடலூர் மாவட்டம் முழுவதும் அனைத்து பெட்ரோல் பங்குகளிலும் பாட்டில்களில் பெட்ரோல் வழங்கப்படமாட்டாது என்ற அறிவிப்பு ஒட்டப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது._

பேட்டி: முரளி, தலைவர், தமிழ்நாடு பெட்ரோலிய வணிகர் சங்கம்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.