ETV Bharat / state

வகுப்புகளைப் புறக்கணித்து அரசுக்கு எதிராக முழங்கிய மாணவர்கள்! - குடியுரிமை சட்டத்திருத்தம்

கடலூர்: குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசு பெரியார் கலைக் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

cuddalore
cuddalore
author img

By

Published : Dec 19, 2019, 6:38 AM IST

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாட்டில் சென்னை பல்கலைக்கழகம், மாநிலக் கல்லூரி, புதுச்சேரி மற்றும் கோவை, திருச்சி ஆகிய பகுதிகளில் உள்ள கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

அந்த வகையில், கடலூர் அரசு பெரியார் கலைக் கல்லூரி மாணவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இஸ்லாமியர்களையும் ஈழத்தமிழர்களையும் புறக்கணித்து மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடிய மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியதைக் கண்டித்தும் மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை சட்டத்தை உடனே வாபஸ் பெற மத்திய - மாநில அரசுகளை வலியுறுத்தியும் திடீரென நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Cuddalore Students Protest

இந்த ஆர்ப்பாட்டத்தில் குடியுரிமை சட்டத்தினைக் கொண்டு வந்த மத்திய அரசையும் ஆதரவு தெரிவித்த மாநில அரசையும் கண்டித்து மாணவர்கள் கோஷங்களை எழுப்பினர்.

Intro:குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடலூர் அரசு பெரியார் கலைக் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்பாட்டம்Body:கடலூர்
டிசம்பர் 18,
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு பல்கலைக் கழகம் மற்றும் கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் சென்னை பல்கலைக்கழகம், மாநிலக் கல்லூரி, புதுச்சேரி மற்றும் கோவை, திருச்சி ஆகிய பகுதிகளில் உள்ள கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

அதை போல் கடலூர் அரசு பெரியார் கலைக் கல்லூரி மாணவர்கள் நூற்றுக்கு மேற்பட்டோர் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இஸ்லாமியர்களையும் ஈழத்தமிழர்களையும் புறக்கணித்து மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடிய மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியதை கண்டித்தும் மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை சட்டத்தை உடனே வாபஸ் பெற மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தியும் திடீரென நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இந்த ஆர்ப்பாட்டத்தில் குடியுரிமை சட்டத்தினை கொண்டு வந்த மத்திய அரசையும் ஆதரவு தெரிவித்த மாநில அரசையும் கண்டித்து கோஷங்கள் எழுப்பினர் மேலும் வாபஸ் பெற வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.