கடலூர் தேவனாம்பட்டினத்தில் சில்வர் பீச் உள்ளது. இங்கு வழக்கத்தைவிட இன்று கடல் சீற்றமாகக் காணப்பட்டது. இதன் காரணமாக கடலில் பெரிய ராட்சச அலைகள் எழும்பியதோடு, கடற்கரை ஓரமாக மணலில் அரிப்பு ஏற்பட்டுள்ளது. கடல் பகுதியில் ஏற்கனவே கடலோர காவல்படை, தேவனாம்பட்டினம் காவல் துறையினர் பொதுமக்கள் குளிக்கத் தடைவிதித்துள்ளனர். மேலும், பொதுமக்களை கடல் அருகே அனுமதிக்கவில்லை.
கடலூர், தேவனாம்பட்டினம் உள்ளிட்ட பல பகுதிகளில் காவல் துறையினர் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுவருகின்றனர். காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரியில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மைய வானிலையாளர் விஜயன் தெரிவித்திருந்தார்.