ETV Bharat / state

கொள்ளிடம் ஆற்றில் ரூ.400 கோடி செலவில் தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் - MRK Panneerselvam

கொள்ளிடம் ஆற்றில் ரூ.400 கோடி செலவில் தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

கொள்ளிடம் ஆற்றில் ரூ.400 கோடி செலவில் தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்

author img

By

Published : Aug 6, 2022, 1:24 PM IST

கடலூர்: மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்து வருவதால் உபரி நீர் கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது. தஞ்சை மாவட்டம் அணைக்கரை அருகே உள்ள கீழணையில் இருந்து சுமார் ஒரு லட்சத்து 80 ஆயிரம் கன அடி தண்ணீர் கொள்ளிடம் ஆற்றில் திறந்து விடப்படுகிறது. இதனால் சிதம்பரம் அருகே உள்ள பழைய கொள்ளிடம் ஆறு மற்றும் புதிய கொள்ளிடம் ஆறு நடுவே அமைந்துள்ள திட்டுக்காட்டூர், கீழகுண்டலபாடி, அக்கரை ஜெயங்கொண்டபட்டினம் ஆகிய 3 தீவு கிராமங்களையும் தண்ணீர் சூழ்ந்துள்ளது.

இந்த கிராமத்தின் தெருக்களிலும் தண்ணீர் ஓடுவதால் ஏராளமானோர் புயல் பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில் தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம், கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியம் மற்றும் அலுவலர்கள் குழுவினர் இன்று வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை பார்வையிட்டனர்.

கொள்ளிடம் ஆற்றில் ரூ.400 கோடி செலவில் தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்

திட்டுக்காட்டூர் மற்றும் கீழகுண்டலபாடி கிராமத்திற்கு வந்த அமைச்சர் மற்றும் கலெக்டர் உள்ளிட்டோர் புயல் பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களை நேரில் பார்த்து குறைகளை கேட்டறிந்தார். பின்னர் கீழகுண்டலபாடி கிராமத்தில் தண்ணீர் ஓடும் பகுதிக்கு நடந்து சென்ற அமைச்சர் பொதுமக்களிடம், பாதுகாப்பாக இருக்கும்படி கேட்டுக் கொண்டார்.

மேலும் வேளாண்மை மற்றும் உழவர் துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் கூறுகையில், கொள்ளிடம் ஆற்றில் அளக்குடி காரமேடு இடையே ரூ.400 கோடி மதிப்பீட்டில் ஒரு தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இதுதொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சரிடம் எடுத்துக்கூறி ஒரு சில மாதங்களில் ஆய்வுப்பணி மேற்கொள்ள உள்ளதாகவும், அதன் பிறகு திட்ட மதிப்பீடு தயார் செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு - முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.