கடலூர் மாவட்டத்தில், மதுவிலக்கு அமல் பிரிவு சப் இன்ஸ்பெக்டர் பிரசன்னா, காவலர்கள் கும்தாமேடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்த சைகை காட்டினர். ஆனால் அந்த கார் நிற்காமல் வேகமாக சென்று விட்டது.
இதையடுத்து, காவலர்கள் அந்த காரை விரட்டி சென்று பிடித்தனர். அப்போது அந்த காரில் பெண் உட்பட இருவர் இருந்தனர். பின்னர் காரை சோதனை செய்த போது 300 லிட்டர் கள்ளச்சாராயம், 10 அட்டைப்பெட்டிகளில் மது பாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.