ETV Bharat / state

சிதம்பரத்தில் இன்று முதல் 144 தடை உத்தரவு: என்ன காரணம்? - சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்களுக்கு எதிராக போராட்டம்

சிதம்பரம் நடராஜர் கோயிலில் சிற்றம்பல மேடையில் ஏறி சாமி தரிசனம் செய்யும் விவகாரத்தால், இன்று முதல் ஒரு மாத காலம் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக கோட்டாட்சியர் தெரிவித்துள்ளார்.

அறிவிப்பு
அறிவிப்பு
author img

By

Published : Mar 24, 2022, 7:57 PM IST

கடலூர்: கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் நடராஜர் கோயில் உலகப் புகழ் பெற்ற கோயில் ஆகும். நடராஜர் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு சிற்றம்பல மேடையில் ஏறி நின்று, சாமி தரிசனம் செய்ய அனுமதிப்பது வழக்கம்.

ஆனால், கடந்த சில நாட்களாக கோயில் தீட்சிதர்கள் பக்தர்களை சிற்றம்பல மேடையில் ஏற்றி சாமி தரிசனம் செய்ய தடுத்து வருகின்றனர் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் அங்கு பக்தர்கள்- தீட்சிதர்கள் இடையே மோதல் போக்கு நிலவி வந்தது.

காங்கிரஸ் போராட்டம்: மேலும் காங்கிரஸ் உள்ளிட்டப் பல்வேறு கட்சிகள், அமைப்புகள் பக்தர்களை சிற்றம்பல மேடையில் ஏற்றி சாமி தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை நடத்தினர். இதைத்தொடர்ந்து வருகிற 26ஆம் தேதி காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் நடராஜர் கோயில் சிற்றம்பல மேடையில் ஏறி தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும். இதற்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் எனக் கூறி மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்திருந்தனர். இதானல் அங்கு மேலும் பதற்றமான சூழல் ஏற்பட்டது.

அறிவிப்பு
அறிவிப்பு

144 தடை: இந்தநிலையில், சிதம்பரம் கோட்டாட்சியர் இன்று(மார்ச் 24) வெளியிட்டுள்ள அறிவிப்பில், "இந்நிகழ்வு தமிழ்நாடு அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதன் பேரில் இறுதி முடிவு எடுக்கும் பொருட்டு பல்வேறு நிலையில் சட்ட வல்லுநர்களிடம் ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன.

எனவே, அரசின் முடிவினை எதிர்நோக்கி உள்ள நிலையில் அரசியல் கட்சிகள், பக்த பேரவைகள், இதர போராட்டக் குழுவினர் சிதம்பரத்தில் போராட்டம் நடத்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எந்தவித போராட்டமோ, ஆர்ப்பாட்டமோ, ஆலோசனைக் கூட்டமே ஒன்று கூடி மேற்கொள்ள ஒரு மாத காலத்திற்கு அனுமதியில்லை. இன்று முதல் சிதம்பரத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: முல்லைப் பெரியாறு அணைக்கு மாற்றாக புதிய அணை.. நீர்மட்டத்தை 140 அடியாக குறைக்க கேரளா திட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.