கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தில் புதுச்சேரியை சேர்ந்த பிரபல ரவுடி கர்ணன் என்பவரின் கூட்டாளிகள் பயங்கர ஆயுதங்களுடன் தங்கியிருப்பதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து அங்குச் சென்று நெல்லிக்குப்பம் காவல் துறையினர் அவர்களை சுற்றி வளைத்து பிடித்தனர்.
பிடிபட்ட விவேக், உதயன், மணி, சந்தோஷ் குமார் ஆகிய 4 பேரையும் நெல்லிக்குப்பம் காவல் நிலையத்தில் விசாரணைக்கு வைத்திருந்தபோது கழிவறையில் வழுக்கி விழுந்து அவர்களில் இருவரின் கையும் இருவரின் காலும் உடைந்தது.
பின்னர் நடந்த விசாரணை, அவர்கள் புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த ரவுடி முகிலன் என்பவரை கொலை செய்ய திட்டம் தீட்டி இருந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து பிடிபட்டவர்களிடமிருந்து கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணைக்கு பின்னர் நால்வரும் கடலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.