ஃபானி புயலின் எதிரொலியாக, புதுச்சேரி மற்றும் கடலூரில் சூறாவளி காற்றுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக, கடலூர் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருந்ததது. குளிர்ந்த காற்றுடன் கூடிய மழை எதிர்பார்க்கலாம் எனவும் வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது.
இதையடுத்து, கடலூரில் 36 கிலோ மீட்டர் வேகத்தில் குளிர்ந்த காற்றுடன் மிதமான மழை பெய்து வருகிறது. மேலும் காற்று வேகமாக வீசுவதால், பல இடங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.