நெய்வேலியில் உள்ள கட்சி நிர்வாகியின் கடை திறப்பு விழாவிற்கு பொன். ராதாகிருஷ்ணன் வருகைதந்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “கரோனா வைரஸ் (தீநுண்மி) தொற்று அதிகமாக இருக்கும் காலத்தில் சிலர் அதன் வீரியத்தை அறியாமல் வெளியே சுற்றிவந்தனர். அப்படி வெளியே வந்தவர்களிடம் காவல் துறையினர் காலை தொட்டு வணங்கினர்.
பிரதமர் மோடி கூட காவல் துறையினரை உயர்வாகப் பேசினார். ஆனால் தூத்துக்குடியில் காவல் துறையினர் செய்தது தமிழ்நாடு காவல் துறையின் கரும்புள்ளியாக உள்ளது.
இதனால் ஒட்டுமொத்த காவல் துறையையும் கலங்கப்படுத்தக் கூடாது. சாத்தான்குளம் சம்பவத்தில் ஈடுபட்ட காவலர்கள் மீது கொலை வழக்குப் பதிவுசெய்யப்பட வேண்டும்” என்றார்.
இதையும் படிங்க...சாத்தான்குளம் விவகாரம்: முதலமைச்சருக்கு ஸ்டாலின் கேள்வி!