கடலுார் மாவட்டம் பண்ருட்டி மற்றும் சுற்றுப்புறத்தில் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் முந்திரி சாகுபடி செய்யப்படுகிறது. பண்ருட்டி முந்திரி என்றாலே அதற்கு தனி சிறப்பு உண்டு. மேலும் மற்ற முந்திரி ரகங்களை விட தனித்துவமான சுவை கொண்டதால், இந்திய அளவில் பண்ருட்டி முந்திரிக்கு தனி இடம் உண்டு. இங்கு விளையும் முந்திரியை, வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதன் மூலம் அன்னிய செலாவணியும் ஈட்டப்படுகிறது.
பண்ருட்டி பகுதியில் 20% ஏற்றுமதியாளர்கள் உள்ளனர். முந்திரி பருப்பை ரகம் பிரித்து, பதப்படுத்த நடுத்தர தொழிற்சாலைகள் 200, சிறு, குறு தொழிற்சாலைகளில் ஆயிரம் தொழிலாளர்களும், கிராமங்களில் ஒரு லட்சம் பெண் தொழிலாளர்களும் பணியாற்றுகின்றனர்.
இந்நிலையில் கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தமிழ்நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், மாவட்ட எல்லைகளும் மூடப்பட்டன. மேலும் வணிகப் போக்குவரத்து பாதிப்படைந்ததால், முந்திரி தொழிற்சாலையும் மூடப்பட்டுள்ளது. இதனால் முந்திரி தொழிலாளர்கள் வருமானமின்றி அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
எனவே முந்திரி தொழிலாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம். ”தமிழ்நாடு அரசு தொழிலாளர் நல வாரியம் மூலம் தீப்பெட்டி தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு மானியம் வழங்கப்பட்டதுபோல், முந்திரி தொழிலாளர்களுக்கு மானியம் வழங்க வேண்டும். ரேஷன் கடைகளில் வழங்கப்படும் மாளிகை பொருள்களுடன் 20 கிராம் முந்திரியையும் சேர்த்து வழங்க வேண்டும்” என மனு அளித்தனர்.
இதையும் படிங்க: கோயம்பேடு சிறு, காய்கறி வியாபாரிகள் போராட்டம்: கண்டுகொள்ளாத சிஎம்டிஏ அலுவலர்கள்